ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன.
நூற்றுப் பதினைந்து வருடங்களின் பின்னர், நாட்டுப்பற்றற்ற நயவஞ்சகர்கள் போர்த்துக்கீசருடன் உறவாடி, ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களுடைய கொடுமை தாங்க முடையாமல் மக்கள், போர்த்துக்கீசரால் ஆட்சிக்கு வந்த சங்கிலியை கி.மு. 1620 இல் போரின் போது காட்டிக்கொடுக்கப்பட்டு சிரச்சேதம் செய்யப்பட்டான்.
சங்கிலி தமிழ் ஆள்பதி மட்டுமே அரசுரிமை இல்லாதவன். அரச குடும்பத்தில் தோன்றாதவன். நல்லூரில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருந்தது.வன்னிராச்சியம் குலசேகரம் வைரமுத்து அரசனால் ஆட்சி செய்யப்பட்டது. பண்டாரவன்னியன் என்ற பட்டப்பெயருடன் ஆட்சி செலுத்தினான்.1803 இல் ஆங்கிலேய தளபதியால் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களிடமிருந்து தப்பியோடி பனங்காமத்திலிருந்து 1811 வரை பண்டாரவன்னியன் வன்னியின் மன்னனாக இருந்து ஆட்சி செலுத்திய வீரவேந்தன். கரிகட்டுமூலை முதலியாரின் காட்டிக்கொடுப்பினால் வன்னியும் ஆங்கிலேய வசமாகியது.கதிர்காமம், சந்தனகாமம் உட்பட 18 குறுநில அரசுகள் ஈழத்தில் இருந்துள்ளன. மத்திய மலைநாட்டில், கண்டியை இராசதானியாகக் கொண்டு தமிழ் மன்னர்கள் தொடர்ச்சியாக ஆண்டு வந்தனர்.
1815 இல் கூட, ஆங்கிலேயர்களால் கண்டியை வெல்ல முடியவில்லை.கண்டி இராச்சியத்தில் இருந்த ஒரிரு சிங்கள் அதிகாரிகள், ஆங்கிலேயரின் கைக்கூலிகளாக மாறி, தமிழ் மன்னனான ஸ்ரீ விக்கிரமராசசிங்கனைக் காட்டிக்கொடுத்து நயவஞ்சகமாகத் தமிழ் மன்னனையும், தமிழ் இராச்சியத்தையும் அழித்துவிட்டனர் என்று கூறப்படுவது சரியல்ல.
மன்னரின் தவறுகளே, மன்னனை அழைத்து விட்டது.கண்டி அரசனால், தனது மைத்துனருக்காக ஏற்படுத்தப்பட்ட அரசு கோட்டை இராச்சியமாகும். தமிழ் மன்னனான அழகக்கோனுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசு, "அழகக்கோன் கோட்டை" என்றே அழைக்கப்பட்டது. பின் அது "ஜெயவர்த்தனக் கோட்டை" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.1505 இல் போர்த்துக்கீசர் போரின்றி, கோட்டை இராச்சியத்தைத் தம் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர் என்பதை அந்நியர் வரலாற்றுக் குறிப்புக்களினால் அறிய முடிகிறது.
போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் நான்கு இராச்சியங்கள் இருந்துள்ளன. ஐரோப்பியர் இலங்கையைப் பிடித்தபோது, நான்கு தமிழ் மன்னர்களின் தமிழ் இராச்சியங்கள் இருந்துள்ளன. கோட்டை இராச்சியம் மிகக் குறுகிய நிலப்பரப்பினைக் கொண்டிருந்தது.இலங்கைத் தமிழர்களின் இராச்சியங்களாக தமிழ் அரசர்களினால் ஆளப்பட்டு வந்தது என்பதை வெளிநாட்டு, உள்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் நூல்கள் தெரிவிக்கின்றன.எனவே அக்காலத்தில் அதாவது 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் தமிழர்கள் மிகப்பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.
பல்லவராசசேகரன் நன்றி - yarlmann.lk
நாம் ஆண்ட மண்ணில் எமை ஆள்கிறார்கள்...
ReplyDeleteaamaam unmai than...
ReplyDelete