Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

உடல் எடையை தவிர்க்க சாப்பிடக்கூடாத உணவு வகைகள்!

4 comments

உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும்
ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ளனர். கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.


பால்:

உங்களது அன்றாட உணவு பட்டியலில் பாலையும் சேர்த்துக் கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்றாலும், அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாலை அதிக அளவில் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.சிலர் இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் பால் அருந்துவது வழக்கம்.வேறு சிலர் காலை உணவுக்கு பின்னரோ அல்லது மாலை சிற்றுண்டிக்கு பின்னரோ பால் அருந்துவது வழக்கம்.இத்தகைய பழக்கம் உடையவர்கள், குறைந்தது ஒரு மாதத்திற்காவது அப்பழக்கத்தை நிறுத்தி பார்த்தால் மந்த நிலை அகன்று, உடல் எடையும் குறைந்து,மேனியும் தூய்மையாகி வித்தியாசமான மாற்றத்தை உணரலாம்.இத்தகைய மாற்றங்கள் உங்களது பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்.


சாப்பாட்டுக்கு பின் இனிப்பு:

நம்மில் பலருக்கு சாப்பிட்டவுடன் குறைந்தபட்சம் ஒரு கடலை மிட்டாயையாவது சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.இவ்வாறு சாப்பாட்டுக்கு பின்னர் ஸ்வீட் எடுத்துக்கொள்ளும் பழக்கம் முற்றிலும் அநாவசியமான ஒன்று என்பதே நிபுணர்களின் வாதம்.எடுத்துக்கொள்ளும் உணவே சர்க்கரை சத்தாகத்தான்-குளுகோஸ்- மாற்றம்பெற்று உடலுக்கு தேவையான சக்தியை அளிக்க தொடங்குகிறது.அப்படி இருக்கையில் மேலும் ஸ்வீட் எடுத்துக்கொண்டு சர்க்கரை அளவை கூட்டுவது உடல் எடையை அதிகரிக்கத்தான் வழி வகுக்கும்.எனவே அந்த பழக்கத்தை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு கைவிட்டு பார்த்தாலே அதன் பலனை உணர்ந்து, நீங்கள அப்பழக்கத்தை அடியோடு தலைமுழுகி விடுவீர்கள்.


மாலை சிற்றுண்டியில் அதிக கார்போஹைட்ரேட்:

மதிய உணவுக்கும், இரவு உணவுக்குமான இடைவெளியில் மாலை நேர சிற்றுண்டிகளாக நம்மில் பலர் சமோசா, சாண்ட்விச் என பலமாக உள்ளே தள்ளுவார்கள். அது சரியா அல்லது தவறா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவ்வாறு தினமும் வயிற்றுக்குள் தள்ளப்படும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், உடல் எடையை ஏகமாக அதிகரிக்க செய்துவிடும்.

இத்தகைய உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த கொட்டை பருப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.இதனால் பசி உணர்வு தடுக்கப்பட்டு அதிக அளவு கார்போஹைட்ரேட் வகையறா உணவுகள் எடுத்துக்கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.


உருளைக்கிழங்கு:

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றாக, உடல் எடையை அதிகப்படுத்தும் உணவுகளில் ஒன்றாக உருளைக் கிழங்கை பட்டியலிட்டுள்ளனர்.இந்த உருளைக்கிழங்கை நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அது நிச்சயம் உடல் எடையை கூட்டிவிடும்.அதற்குப் பதிலாக பச்சை காயகறிகளை எடுத்துக்கொள்ளலாம்.


நொறுக்கு தீனிகள்:

ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் என்ற பெயரில் அதன் விபரீதம் புரியாமலேயே பலர் சிப்ஸ், முறுக்கு,பேக்கரி அயிட்டங்கள் என விதவிதமாக உள்ளே தள்ளுகின்றனர்.இவையெல்லாம் லைட்ட்டான உணவு வகைகள்.உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதோடு உடலுக்கு சத்தானது என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்த எண்ணம் தவறானது.அதிக அளவில் எண்ணெயில் பொறிக்கப்பட்ட இத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்

அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. Anonymous9:26:00 pm

    nanri arumaiyana pathivu...

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு..

    ReplyDelete
  3. உமக்கு தான் தேவை சஞ்சு

    ReplyDelete
  4. நன்றிகள் உறவுகளே...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா