Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

யாழ் தேவி

5 comments
இலங்கைப் புகையிரத சேவை நாட்டின் அபிவிருத்தியுடன் இணைந்த ஒரு சாதனமாக 1850 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் தோற்றம் பெற்றது. இலங்கையில் புகையிரதப் பாதைக் கட்டமைப்புக்களை உருவாக்கிய பெருமை பிரிட்டிஷ் அரசாங்கத்தையே சாரும். இரும்புத் தண்டவாளங்கள்,
சிலிப்பர் கட்டைகள் மற்றும் சரளைக் கற்களைக் கொண்டு உறுதியான புகையிரதப் பாதைகளை அவர்கள் அமைத்தார்கள்.

ஆளுரர் சேர் ஹென்ரி வோர்ட் அவர்களால் 1858 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைப் புகையிரத சேவைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முதலாவது பிரதான புகையிரதப் பாதை கொழும்பிலிருந்து அம்பேபுஸ்ஸ வரையில் கிழக்கிற்கு 54 கிலோ மீற்றர் தூரம் நிர்மாணிக்கப்பட்டது. அதன் பின்னர் முதலாவது புகையிரதம் 1864 டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தது. மேலும் இப்பாதை புகையிரத போக்குவரத்துக்காக 1865 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

யாழ் தேவி (யாழ் தேவி எஸ்பிரஸ்) என்பது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் புகையிரத சேவையாகும். இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இச்சேவை இராகமை, பொல்கஹவெல, மாகோ, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி கொடிகாமம், சாவகச்சேரி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது.
காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் யாழ் தேவி மதியம் 1.15 இற்கு கொழும்பை வந்தடையும். இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்படும் யாழ் தேவி மதியம் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடையும். யாழ் தேவி புகையிரதத்துக்கு வட பகுதியில் கிடைத்த வரவேற்புக் காரணமாக இலங்கை புகையிரத திணைக்களத்தால் வட பகுதி போக்குவரத்து சேவைக்காக உத்தர தேவி என்னும் புகையிரதம் மேலதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. மதியம் 1.15 இற்கு கொழும்பில் இருந்து புறப்படும் உத்தர தேவி இரவு 8.30 இற்கு காங்கேசன்துறையை சென்றடையும். அதுபோல காங்கேசன்துறையில் இருந்து மதியம் 1.15 இற்கு புறப்படும் உத்தர தேவி இரவு 8.30 இற்கு கொழும்பை வந்தடையும்.

இலங்கை புகையிரத திணைக்களத்துக்கு கிடைத்த ஆண்டு வருமானத்தில் கிட்டத்தட்ட 40 % வருமானம் யாழ் தேவி மற்றும் உத்தர தேவி ஆகியவற்றின் இணைந்த சேவை மூலம் கிடைத்தது. இக்கூட்டணியின் வெற்றியின் காரணமாக பதுளை உடரட்ட மெனிக்கேயின் இணைந்த சேவையாக பொடி மெனிக்கேயும், காலி சமுத்திர கனியின் இணைந்த சேவையாக காலு குமாரியும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

வட பகுதிக்கான யாழ் தேவி மற்றும் உத்தர தேவி சேவைகளுக்குப் புறம்பாக விடுமுறையில் யாழ்ப்பாணம் சென்றவர்களின் வசதி கருதி கடுகதி சேவை (எக்ஸ்பிரஸ்) ஒன்று ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை இரவும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு நாளும் தபால் சேவை (மெயில்), பொருட்கள் சேவை(குட்ஸ்), எண்ணெய் சேவை (ஒயில்) ஆகிய புகையிரத சேவைகளும் இடம்பெற்றன. இச்சேவை இலங்கையின் யுத்த சூழ்நிலைகளால் வவுனியாவுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

1990 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் நாளன்று கடைசித் தடவையாக யாழ்தேவி காங்கேசன்துறை வரை சென்றது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கைப் படைத்துறை அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. யாழ் தேவியை எதிர்பார்த்திருப்போம்

அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

  1. saravanapavan9:26:00 pm

    meeeluma antha naaddkal...

    ReplyDelete
  2. யாழ்தேவி வருமா அண்ணா?

    ReplyDelete
  3. @Thusha நிச்சயம் ஒரு நாள் வரும்..

    ReplyDelete
  4. வரும் தம்பி ஆன வராது

    ReplyDelete
  5. நிச்சயம் வரும் பாருங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா