Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

சிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்

7 comments


ஐயோ சிகரட்டா வேண்டாம்...!!


பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிறார்கள். நம்ம நாட்டிலையும் இதுக்கு என்ன பஞ்சமா? சின்னவயசு, பள்ளி காலம், வாழ்க்கை எங்கும் எந்த சிகரட் மோகம் தான்.  என்ன தான் இதில இருக்கு என்னா அடிச்சு பார் தெரியும்
என்கிறாங்க...
பக்கத்த நிக்குறவன் விடுற புகையே தலைய சுத்த வைக்குதென்ன நாம அடிச்சா கவிண்டுடுவம். ஐயோ வேண்டாம்ப..

இது தொடர்பா அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆராய்ச்சியில, காலையில எழுந்தது புகை பிடிப்பதினால நுரையீரல், கழுத்து அப்புறம் தலையில புற்று நோய் வருவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக அந்நோய் பாதித்த 4,775 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில, அவர்கள் அனைவருமே காலையில எழுந்ததும் வழக்கமாக சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவே இருந்துள்ளது தெரியவந்துள்ளதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ பேராசிரியர்களில் ஒருவரான பென்.

சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு ஆண்களை விட அபாயம் அதிகம்

ஆண்கள் புகைபிடிப்பதாலோ அல்லது புகைபிடிப்போருக்கு அருகில் இருக்கவோ நேரும் பெண்கள், மாதவிலக்கின் போது அதிகம் துன்பப்படுகின்றனர். இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவதுடன், கருக்கலைவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு.

புகைபிடிக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், சராசரியாக அரைக்கிலோ எடைக்குறைவாக பிறக்கின்றன. இதனால், குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. ஊனத்துடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

இது என்னடா வம்பு என்கிறீங்களா...? ஆண் பெண் இருபாலரிடமும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த புகைபிடிக்கும் பழக்கத்தால ஆண்களை விட பெண்களுக்கு தானாம் இதயநோய் தாக்கும் அபாயம் 25% கூடுதலாக இருக்கு  எண்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
சிகரெட்டில் உள்ள நச்சு பொருள் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட காலம் புகைபிடிக்கும் பெண்களுக்கு ஆண்டுதோறும் 2% அபாயம் அதிகரிக்கிறது.
நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு இரு மடங்கு வாய்ப்புகளும் உள்ளன. அமெரிக்க கல்வியாளர்களான மருத்துவர் ராக்சல் ஹக்ஸ்லி மற்றும் மருத்துவர் மார்க்வுட் வார்டு ஆகியோர் 8ம் ஆய்வுகளில் 40 லட்சம் மக்கள் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரித்து உள்ளனர்.
ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின்


ஒரு சிகரெட்டில் ஒரு மில்லிகிராம் நிக்கோடின் உள்ளது. இந்த நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து ஊசியால் உடலுக்குள் செலுத்தினால், ஆள் உடனே இறந்துவிடுவாராம் 

இத்தகைய கொடிய நஞ்சுதான் புகைபிடிக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக ஆளைக் கொலை செய்கிறது.

நிக்கோடினுடன் சேர்ந்து சிகரெட்டில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. ஒருவர் ஒரு சிகரெட்டு புகைத்தால், அவரது வாழ்நாளில் ஏழு நிமிடம் குறைகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை சிகரெட்டு பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் நஞ்சு, போதைப் பொருளாகச் செயல்பட்டு மூளையை அடிமைப்படுத்துகிறது. சிகரெட்டு புகையை உள்ளிழுத்தவுடன் நுரையீரலில் நிரம்பும் புகையானது, ஏழு விநாடிக்குள் மூளையைத் தாக்குகிறது. இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இதனால் புகைப்போர் மாரடைப்பால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சிகரெட்டு அறிவுத்திறனை பாதிப்பதையும், நினைவை மழுங்கடிப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

நோய்த் தாக்கம் 
அதிகமாக புகைபிடிப்போருக்கு கண்களில் விழித்திரை நோய் தாக்கும் வாய்ப்பு இருமடங்கு உண்டு. முதுமையடையும்போது பார்வைக் குறைவு ஏற்படும் வாய்ப்பும் 5 மடங்கு அதிகம் உண்டு.
வாய் மற்றும் நாக்கில் புற்றுநோய் தாக்குவதற்கு புகைபிடிப்பதும், புகையிலைப் பொருட்களை சுவைப்பதுமே முதன்மை காரணம். வாய்ப் புற்றுநோய் வரும் வாய்ப்பு புகைப்பிடிப்போருக்கு 30 மடங்கு அதிகமாகும்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் வாய்ப் புற்றால் ஆண்டுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள்.
புகைபிடிப்பதால் இரத்து அணுக்களில் கரிக்காற்று திணிக்கப்பட்டு, உயிர்காற்று பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், இதயம் உயிர்வளிக்காக ஏங்குகிறது. சாதாரணமானவர்களைவிட, புகைபிடிப்போர் 15 மடங்கு வரை அதிகமாக இதய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
சிகரெட்டு அதிகமாக தயாரிக்கப்படுவதும், அதிகமானோர் புகைபிடிப்பதும் கடந்த நூறாண்டுகளாகத்தான். அதற்கு முன்பெல்லாம் உலகில் நுரையீரல் புற்றுநோய் என்பது கேள்விப்படாத ஒன்றாக, எங்கோ ஒன்றுதான் கண்டறியப்பட்டது.
மூச்சுத்திணறல், இருமல், இரத்த வாந்தி என இன்னும் பல பாதிப்புகளுக்கு புகைபிடித்தல் காரணமாகிறது.

புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்
  1. உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
  2. உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
  3. நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்படமாட்டார்.
  4. உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல் மற்றும் சளி மறையலாம்.
  5. உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.
புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்
  1. நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.
  2. உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கை வளரும்.
  3. இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.
  4. புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம், மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்....

Next PostNewer Post Previous PostOlder Post Home

7 comments:

  1. சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தை களுக்கு காது செவிடா கும் ஆபத்து

    ReplyDelete
  2. சில இளைஞர்கள் அறியாமையின் காரணமாக சிகரட் புகைக்கின்றனர்.

    இவ்வாறு இவர்கள் சிகரட் புகைப்பதனால் உதடு கறுத்து பற்களில் கறை படிந்து கண்கள் சிவந்து கன்னங்களில் குழி விழுந்து இளவயதிலேயே வயது முதிர்ந்த தோற்றத்தை அடைகின்றனர் .

    இவ்வாறு பணம் செலவழித்து அவலட்சணமாகுவது மட்டும் அல்லாமல் அவர்களிடம் நெருங்கமுடியாத அளவு வாய் நாற்றம் வீசுகின்றது

    ReplyDelete
  3. saravanapavan11:13:00 am

    சிகரட் புகைப்பது வீரமான, கம்பீரமான, பயங்கரமான, புதுமையான செயல் இல்லை என்றும் அதை வேண்டியவர்கள் செய்ய முடியுமான முட்டாள் தனமான பலவீனமான பாதிப்புக்கள் நிறைந்த செயல்

    ReplyDelete
  4. Thamilan11:14:00 am

    yes thamil புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோர், குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டாம்

    ReplyDelete
  5. நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு...

    ReplyDelete
  6. Anonymous8:36:00 pm

    உங்கள் தகவல்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  7. நன்றி உங்கள் கருத்துக்கு.. நண்பர்களே

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா