தற்கொலைகள் எமது யாழ் மண்ணில் அதிகரிக்கின்றன. யாழ் குடநாட்டில் கடந்த வருடத்தை விட இவ்வருடம் தற்கொலை செய்பவர்களின் தொகை அதிகரித்து காணப்படுவதாக யாழ் போதன வைத்தியசாலையில் உளநல சிகிச்சைப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
தெரிவிக்கப்படுகிறது. கரணம் இன்றி, சிறு காரணங்களுக்காக தற்கொலைகள் நிகழகின்றன, தற்கொலைகள் தொடர்பான ஓர் கண்ணோட்டமே இது.
39 மணித்துளிக்கு ஒருவர்வீதம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகின்றது. மேலும் 10 முதல் 20 மில்லியன் பேர் தற்கொலை முயற்சியிலிருந்து ஆண்டுதோறும் தப்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது
தற்கொலை என்பது தமது உயிரை தாமே மாய்த்துக்கொள்வது. அது உடலை வருத்தி நடைபெறும் ஓர் செயற்பாடு. துக்கில் தொங்குதல், நஞ்சு அருந்துதல், குளம், கடல், கிணறு முதலிய வற்றில் விழுதல். தீக்குளித்தல் போன்றவற்றால் இவை நிகழலாம்.
தற்கொலைகள் செய்வதற்கான காரனங்கள் என்ன?
தாம் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் மரணம், பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவு, குற்ற உணர்வு, சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல், தாங்க முடியாத நோய்கள், மன நிலை பாதிக்கப்படுவது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, பிறர் தூண்டுதல், பரீட்சைகளில் தோல்வி, காதல் தோல்வி, கல்யாணமாகாது கற்பமாவது, தற்போதைய உலகத்தின் எல்லாவித போட்டிகளை கண்டு பயப்படுவது, நிறைவேறாத ஆசைகள் அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் என்று பல காரணங்களினாலும் தற்கொலை நடைபெறுகின்ற போதும் தொண்ணூறு வீதமான தற்கொலைக்குக் காரணம் மேல் குறிப்பிட்ட காரணங்களால் மனநிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளே என்று கண்டறியப்பட்டுள்ளது. மனபதட்டம், மனசிதைவு, psychotic என்பதான மனநோய்கள் ஏற்படுபவர்களுக்கு தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் அதைவெளிப்டுத்துவார்களா?தாம் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் மரணம், பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவு, குற்ற உணர்வு, சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல், தாங்க முடியாத நோய்கள், மன நிலை பாதிக்கப்படுவது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, பிறர் தூண்டுதல், பரீட்சைகளில் தோல்வி, காதல் தோல்வி, கல்யாணமாகாது கற்பமாவது, தற்போதைய உலகத்தின் எல்லாவித போட்டிகளை கண்டு பயப்படுவது, நிறைவேறாத ஆசைகள் அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் என்று பல காரணங்களினாலும் தற்கொலை நடைபெறுகின்ற போதும் தொண்ணூறு வீதமான தற்கொலைக்குக் காரணம் மேல் குறிப்பிட்ட காரணங்களால் மனநிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளே என்று கண்டறியப்பட்டுள்ளது. மனபதட்டம், மனசிதைவு, psychotic என்பதான மனநோய்கள் ஏற்படுபவர்களுக்கு தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றது.
தற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கும் மிரட்டலர்கள் நிறையப் பேரும் இருக்கின்றார்கள். இவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். தமது காரியங்களை சாதிக்க இவர்கள் போடும் நாடகமே இது.
சிறிய அளவு மருந்தை குடித்து விட்டு தான் மருந்து குடித்து விட்டேன் என்று உடனேயே கூறுவார்கள். தற்கொலை செய்யப் போகின்றேன் என்று பறைசாற்றி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டுவார்கள் எப்படியும் உடைத்து திறந்து தடுப்பார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் உண்மையில் தற்கொலைக்குத் துணிபவர்கள் எவருக்கும் தெரியாமல் திட்டம் தீட்டுவார்கள். தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத வழிகளையும், நேரத்தையும் இவர்கள் தெரிந்தெடுப்பார்கள்.
பொதுவாக தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் சாதாரனமாக பேசும் போதும் அவர்களின் தினசரி நடவடிக்கைளிலும் பல்வேறு விதங்களில் தற்கொலை எண்ணத்தை வெளிப்டுத்துவார்கள் அதை நாம் அலட்சிய படுத்தாமல் அவரை நல்ல மனநலமருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்த வழிறையாகும்.
மனநோய் என்றால் என்ன?சிறிய அளவு மருந்தை குடித்து விட்டு தான் மருந்து குடித்து விட்டேன் என்று உடனேயே கூறுவார்கள். தற்கொலை செய்யப் போகின்றேன் என்று பறைசாற்றி விட்டு அறைக்குள் சென்று கதவை பூட்டுவார்கள் எப்படியும் உடைத்து திறந்து தடுப்பார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் உண்மையில் தற்கொலைக்குத் துணிபவர்கள் எவருக்கும் தெரியாமல் திட்டம் தீட்டுவார்கள். தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத வழிகளையும், நேரத்தையும் இவர்கள் தெரிந்தெடுப்பார்கள்.
பொதுவாக தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் சாதாரனமாக பேசும் போதும் அவர்களின் தினசரி நடவடிக்கைளிலும் பல்வேறு விதங்களில் தற்கொலை எண்ணத்தை வெளிப்டுத்துவார்கள் அதை நாம் அலட்சிய படுத்தாமல் அவரை நல்ல மனநலமருத்துவரிடம் அழைத்து செல்வது சிறந்த வழிறையாகும்.
மனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. இதற்குள் பல வகையான நோய்கள் உள்ளடங்குகின்றன. இந்த மனநோய்க்கு வயது பால், பொருளாதாரம், இனம் மதம், ஜாதி என்று எந்த வேறுபாடும் கிடையாது. எவரையும் எந்த நேரமும் இது தாக்கக் கூடும்.
மனநோய்க்கான காரணங்கள் பல உள்ளன. பொதுவாக மூளையில் ஏற்படும் இரசாயன சமனின்மையே இந்த மனநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகின்ற அழுத்தங்கள், அதிர்ச்சிகள் காரணமாக மரபணுக்களில் ஏற்படும் இரசாயன சமநிலையில் பாதிப்பு இதற்க்கு காரணமாக இருக்கலாம் என கருதுகிறேன்.
மனநோய்க்கான அறிகுறிகள் என்ன?
சம்பந்தமே இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது, தடால் தடால் என்று ஒரு விசயத்தை விட்டு இன்னொரு விசயத்திற்குத் தாவுவது, அதீத பயம் கவலை, என்ன வென்று விபரித்து சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல். போன்றன அவற்றுள் சிலவாகும்.
சம்பந்தமே இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது, தடால் தடால் என்று ஒரு விசயத்தை விட்டு இன்னொரு விசயத்திற்குத் தாவுவது, அதீத பயம் கவலை, என்ன வென்று விபரித்து சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அடிக்கடி தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுதல். போன்றன அவற்றுள் சிலவாகும்.
மனபதட்டம் அல்லது மனஅமுக்கம் (Depression ) என்றால் என்ன?
மூளையில் நரம்புகளுக்கிடையேயான செய்திகளை பரிமாற்றுவதற்கு காரணமான இரசாயனப் செயல்பாடுகளின் சமநிலை சீர்குலைகின்றது. இரசாயனப் செயல்பாடுகளின் அளவு குறைய செய்திகளின் செறிவு குறைகின்றது. இதனால் நரம்பு மண்டலம் பூரணமாக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் சோர்ந்து போய் இருப்பார். பெரும் கவலை அவருக்கு இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாளில் மாறக்கூடிய கவலை அல்ல. மருத்துவ உதவி பெற வேண்டிய மனநோய்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் சோர்ந்து போய் இருப்பார். பெரும் கவலை அவருக்கு இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாளில் மாறக்கூடிய கவலை அல்ல. மருத்துவ உதவி பெற வேண்டிய மனநோய்.
பொழுது போக்கு, பாலியல், வேலை எதிலும் நாட்டம் இருக்காது. எந்த விசயமும் இவர்களுக்கு சந்தோசத்தை தராது. முன்பு மகிழ்ச்சியை தந்த காட்சிகள், பொருட்கள், பாடல்கள் எல்லாம் அதன் ஜீவனை இழந்து விட்டதாகத் தோன்றும். எதற்கும் பிரயோசனம் இல்லாத ஆள் தான் என்ற நினைப்பு அடிக்கடி வரும். தற்கொலை எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். பின்னர் எப்படி தான் தற்கொலை செய்து கொள்வது என்று கற்பனை செய்ய தொடங்குவார்கள்.
மனசிதைவு ( Schizophrenia ) என்றால் என்ன?
தாழ்வு மனப்பான்மை அளவுக்கும் அதிகமாக இருக்கும். ஒருவரின் சிந்தனை, பேச்சு, உணர்ச்சி, நடத்தையில் எல்லாம் குழப்பம் இருக்கும். உலகம் இவருக்கு ஒரு பயமுறுத்துகின்ற இடமாகவும், குழப்பமான இடமாகவும் தோன்றும்.
உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும். தன்னை யாரோ கடத்த போகிறார்கள் என்பார்கள். வெடுக்கு அடிக்கடி வருகிறார் என்பார்கள். ஆனால் அதில் எதுவும் உண்மை இருக்காது.
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது மனநோயாளராக இருந்தால் அவருக்கு உதவ முற்படுங்கள். கண்டிப்பாக அவருக்கு மருத்துவ உதவி தேவை. ஆரம்பத்திலேயே இதை குணப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அதிகம். முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நவின மருத்துவமுறைகள் வந்துள்ளன அதன்மூலம் எளிதாக குணப்படுத்த முடியயும் மனநோயின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். அவர்களையும் உங்களின் ஒருவரை நினைத்து வாழுங்கள்.

yuththam than karanam da..
ReplyDeleteகடவுள் தந்த உயிர் அதை எடுக்க எமக்கே உரிமை இல்லை
ReplyDelete