இன்று எமது யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஒன்று வீதி அகலிப்பு. நீண்டகாலமாக அறிவிக்கப்பட்டு வந்த வீதியின் அகலிப்புப் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்
பல்வேறு இடங்களில் முடிவுற்று இப்போது A9 யும் எட்டி பார்த்துள்ளது.

இதைவிட கனரக வாகனங்களின் துணையுடன், தற்போது இருக்கும் வீதியின் இருமருங்கிலும் அகழ்வு வேலைகளும் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கையில் மதவுகளும் புனரமைக்கப் படுகின்றது. இவை தனியார் நிறுவனதினால் செயப்பட்டு வருகின்றது.
நிறுவனமானது தனது நிறுவனங்களை இங்கே அமைத்து மக்களுக்காக சேவை வழங்குவதுடன், யாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க தவறவில்லை.

வீதி அகலிப்பு எல்லைக்குள் வரும் பல வீடுகள், கடைகள், நிறுவனங்கள், கோவில்கள் என்பனவற்றின் ஒரு பகுதியும் இந்த அகலிப்புப் பணியால் இடிக்கப்படும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இதனால், இங்கு உள்ளோர் / பயன் பெறுவோர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்ப நிலையில் உள்ளதைக் காண முடிகிறது.
இவை நடை பெறுவதால், வாகனங்கள் அதிகம் பயணிக்கும் வீதி என்பதால் விபத்துகளும் இடம்பெறுகின்றன அனைத்தும் சாரதிகளின் கவனக்குறைவாலே அன்றி வேறு ஏதும் எல்லை. வேலை நடைபெறும் இடங்களில் அனைத்து விதமான சைகைகளும் இருந்தும் அதனை கவனிக்காது தமது பாட்டுக்கு செயற்படுதல் இதற்கான காரணங்கள் ஆகும். எனவே இந்த அபிவிருத்தி முடியும் வரையும் சாரதிகள் மிகவும் கவனத்துடன் நடக்கவேண்டியது கட்டாயம் ஆகும்.

அன்புடன் sanjay தமிழ் நிலா
unmaiyana pirachaikal than...
ReplyDeleteநன்றி நண்பா..
ReplyDeleteதற்போது நடக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறுவது சிறப்பான ஒன்றாகும்..
ReplyDeleteநன்றி ஐயா.....
ReplyDeleteநீங்கள் எழுதுவது உண்மையான பிரச்சனைகளே..
ReplyDeleteநன்றி நண்பா... அனைவருக்கும் நன்றிகள்
ReplyDelete