Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நான் நாத்திகன் அல்ல...!

6 comments
யாழ்ப்பாணம், அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள பல ஊர்களிலும் இன்று வேள்வி என்று அழைக்கப்படும் பசு, ஆடு, கோழிபோன்ற உயிரினங்களை பலியிட்டு வழிபாடு செய்யும் முறை ஒன்று என்றும் இல்லாத அளவுக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.
ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஊர்க்கோவில்கள் என்ற கணக்கில் இவ்வாறான வேள்வி வழிபாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. யுத்தம் முடிந்த கையேடு இந்த யுத்தம் தொடக்கி விட்டது.

இன்று இந்தக்கோவிலில் வேள்வியாம் உங்களுக்கு எத்தனை பங்கு வேண்டும்? என்ற கேள்வியுடன் ஒரு பெரிய கூட்டமே, இறச்சித்தரகர்களாக உலாவிக்கொண்டு திரிகின்றனர். என்னையே கேடிருகிரர்கள்.

எமது யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் புதியதா? என்றால் அதன் விடை இல்லை என்று தன வருகிறது . ஆனால் தற்போது இந்த நடவடிக்கைகள், பூஜைகள், வேள்விகள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

இவ்வாறான வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமங்களில், உள்ள காட்டுவைரவர் கோவில்கள், வீரபாகு கோவில்கள், முனீஸ்வரர் கோவில்கள், சுடலை வைரவர் கோவில்கள், பிடாரி அம்மன் கோவில்கள், காளி கோவில்கள் போன்றவற்றில் தொன்று தொட்டு இடம்பெற்றுவருகின்றது.
இருந்தபோதிலும் நல்லை ஆறுமுக நாவலர் அவர்களின் காலத்தில், சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தி இவ்வாறான பலிபூஜைகள் நிறுத்தப்படவேண்டும் என்று அணித்தரமாக அவர் செயற்பட்டுவந்தமையின் காரணமாக பல கோவில்களில் இத்தகய நடவடிக்கைகள் வழக்கொழிந்துபோயிருந்தன.

எனினும் 1983 ஆம் ஆண்டுகளின் பின்னர் உருவான போராட்டகாலங்களில்  இத்தகைய நடவடிக்கைகள் பாரிய அளவில் குறைந்துகொண்டு சென்றன. குறிப்பாக 1992 தொடக்கம் 1995 வரை அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின்கீழ் யாழ்ப்பாணம் இருந்தபோது இவ்வாறான மிருகபலி பூஜை வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டதும் குறிப்படத்தக்க ஒரு விடயமே.

"கீதையில் கிருஷ்ண பகவான், 'என்னை யார் எப்படி அணுகுகிறார்களோ, அவர்களை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறுகிறார். இப்படித்தான் கடவுளை அணுக வேண்டும் என்று கூறாத ஒரே மதம் இந்து  மதம் தான். அப்படியிருக்க, இப்படியொரு நிலைமை ஏன் ஏற்பட்டது......?"
பஞ்சமா பாதகங்கள் அற்ற சமுகம், கொல்லாமை, உயிரினங்களின்மேல் அன்பு, அன்பே இறைவன், அன்பே சிவம் என்றும் அன்பு வழியையே இறைவனை அடையும் பக்தி வழியாக கொண்டு, சகல ஜீவராசிகளும் சமனானதே, ஜீவகாருண்யம் சமய கடமை, உண்ணும்போது ஒருபிடி வாயில்லா ஜீவனுக்கு வை, போடும் கோலத்தில்க்கூட அந்த அழகில் உள்ள மா எறும்புக்கு பசிபோக்கட்டும், இறைவன் அனைத்து உயிர்க்கும் பொதுவானவன் அதனாலேயே அவன் மிருகங்களை தனது வாகனங்களாக வைத்திருக்கின்றான் என்றெல்லாம் உன்னதமான அன்பைப்போதிக்கும் மதத்தின் பேரால், கடவுள்களின் பெயரால் இந்த இரத்தப்பூஜைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது....
இலட்சக்கணக்கில சனங்கள் செததுப்போச்சாம் அதைப்பற்றி ஒருவரும் கதைக்கேல்ல! ஆடு, கோழியளுக்கு கதைக்கிறதோ என்ற எண்ணமோ தெரியாது...

இனி இந்த நாட்டில் ஒரு மிருகத்தைக் கூட பலி கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று விலங்குகள் மீது பற்றும் பாசமும் கொண்ட பிக்குகள் கும்பலாகக் கிளம்பிவிட்டார்கள்.

கோவில் விழா நடக்குமா நடக்காதா? அப்படியே நடந்தாலும் பலி வழிபாடு உண்டா? கோவிலுக்கு ஆட்டை எடுத்துச் செல்லலாமா? என்றெல்லாம் பக்தர்கள் விவாதம் வைக்கும் நிலையில், இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரட்ண அடுத்த குண்டை தமிழ் மக்கள் மீது வீசுகிறார் 

“2600வது சம்புத்த ஜெயந்தி தொடர்பான சமய நிகழ்வுகள் பிரதேச செயலர் மட்டத்தில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒரு விகாரையை அமைப்பது தான் எமது இலக்கு." இவாறு..

அப்பாடி ஒருவழியா மிருக வதைக்கு ஆப்பு.. ஆனால் தமிழர் இடத்தில் புத்த கோவிலா....??? எல்லாம் போச்சு போ...
ஒன்றை விவாதிக்க போய் இன்னொரு விவாதத்தை தொடங்கியாசு..


விவாதம் 1 - கடவுளுக்கு பலியிடுவது சரியா தவறா...??
விவாதம் 2-  தமிழர் இடத்தில் புத்த விகாரைகள் தேவையா...??

உங்கள் கருத்துக்களுக்கு...
sanjay தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

6 comments:

  1. Anonymous7:16:00 am

    ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டபோது கொண்டாடிய பௌத்தத் துறவிகள் விலங்கள் பற்றி கவலைப்படுகிறார்கள்.

    ReplyDelete
  2. saravanapavan7:20:00 am

    மிருகங்களை பலியிட்டு கடவுளை வழிபடுவது சரியா அல்லது தவறா என்கிற விவாதமே தவறானது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. கடவுளுக்கு பலியிடுவது தவறு அல்ல மிகப்பெரிய தவறு.
    விவாதம் 2ற்கு பதில் அளிப்பதில் விவாதம் இருக்கிறது.

    ReplyDelete
  4. @Anojh உண்மைதான் என செய்வது மதம் என்ற பெயரால் எமை மடையாக்குகின்றார்கள்,,,

    ReplyDelete
  5. Anonymous8:13:00 pm

    matham oru madaimai.....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா