Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
சினிமா இப்போது உலகையே ஆக்கிரமித்துவிட்டது. இது எல்லாமலும் இருக்கலாம் படம் இல்லாமலா? அது முடியாது என்பதே இப்போதைய பதில். வயசு வேறுபாடு இல்லாமலே எல்லோரும் ஒன்றாக போகும் இரு இடங்களில் இதுவும் ஒன்று.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல், தமிழர் பண்பாடு ஆகிய துறைகளில் இவர் ஆற்றிய உரைகளும், எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 23 நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.

"சாதிகள் இல்லையடி பாப்பா! அது அப்போ....!! சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ..."

சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக  இட்டதன் காரணம் சாதிகளின் பெயரைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது கீழ்மைப்படுத்தவோ அல்ல.
இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக கறை படிந்த சிறகுகள்.. என இட்டு மொத்தம் ஐம்பது விடையங்களை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

என்னால் முடிந்தது இது தான். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இவற்றில் அதிகமானவை எனது "ஒரு மனிதனின் கவிதைகள்" வலைத்தளத்திலும், எனது முகப்புத்தகத்திலும் வெளியானவை, இவற்றில் சில காற்றுவெளி இணைய இதழில் வெளியானவை. 

எனது முதல் கவிதை தொகுதி உங்களுக்காக...



(2005 -2011 )

இதை தொடர்ந்து இரண்டாவது இணைய கவிதை தொகுதி விரைவில் வெளிவரும்.. 
உனக்காக மட்டும் என் காதல்...
முற்றிலும் ஹைஹூ காதலால் நிறைந்தது..


அன்புடன் sanjay தமிழ் நிலா

இதுவரை காலமும் எழுதிவந்த கவிதைகள் சிலவற்றை ஒன்றிணைத்து (கவிதையில்லிங்க   புலம்பல்களை) ஒரு மின் புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இதன் தலைப்பாக கறை படிந்த சிறகுகள்.. என இட்டு மொத்தம் ஐம்பது விடையங்களை உள்ளடக்கியுள்ளது. அச்சு இடுவது என்பது பெரும் கவிஞர்களால் மட்டுமே முடியும்.

கருக்கலைப்பு என்பது கருவை/முதிர்கருவைக் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பையில் இருந்து அகற்றிவிடுதல் அல்லது அழித்துவிடுதல் ஆகும். கருக்கலைப்பு என்பது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படுவது. சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படுவது உண்டு. இது பொதுவாக கருச்சிதைவு எனப்படும்.
இன்று அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் மற்றும் சிறுவர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

முதியோர் தினம்
முதியவர்களை கௌரவப்படுத்தவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாகவும்,

முதியோர் தின நாளில்..ஒரு பெரியவரின் சுய தீர்ப்பு..


திரும்பிப்பார் மகனே..

அப்பா என கூப்பிட்ட நீ
இப்போ யாரப்பா என்கிறாய்...
உன் மனைவி வந்தபின்
யாரோ என பாக்கிறாய்..

வயிற்றில் சுமந்தாள் அன்னை,
அவளுக்கு வலிக்கவில்லை...
தோளில் தினம் சுமந்தேன்
எனக்கும் வலிக்கவில்லை...
என்னை நீ சுமக்கவில்லை..
இருந்தும் எனக்கு வலிக்குறது..

மாதாந்தம் பத்தாம் திகதி
தினம் வராதா சொல்வாயா..?
பத்தாயிரம் பென்சனுக்கு
எங்கிருந்து வருகிறது
திர்டீரென அன்பெல்லாம்..???

முதுமை வந்த பின்னல் என்
முகம் பார்த்தும் நீ உன்
முகம் திருப்பி போகையில்
துடிக்காத என் இதயமும்
நொடிக்கு இருதரம் துடிக்குதடா...

திரும்பிப்பார் மகனே..

சிறுவயதில் உன்
இரவு திருவிழாவை
ஒரு வயதில்
நான் கூற சிரித்திருக்கிறாய்...
ஒரு நாள் கட்டிலில்
போனதற்காய்
கடிந்து விழுந்தாய்..
உணர்வே இல்லாமல்
தான் போகுதடா
இது கூட புரியலையா...!!

திரும்பிப்பார் மகனே

ஆறு வயதில் ஒன்றை
அறுபதுதரம் கேட்டும்
சொல்லியிருக்கிறேன்..
ஆறு தரம் தான்
அன்பாய் கேட்டிருப்பேன்..
அறுபது வயது தான்
ஆகிறது..."உனக்கு
அறளை பேந்து விட்டது,
என்கிறாள்
உன் மனைவி..

உங்களுக்கு ஆடை
வாங்குகையில் எனக்கும்
ஒன்று வாங்குங்கள்..
குளிப்பது சிரமமாக
இருக்கிறது... அடிக்கடி
உடையையாவது
மாற்றிக்கொள்கிறேன்..

குழந்தைகள் கூட
நெருங்க மறுக்கிறாய்
முதுமை தொற்றிவிடும் என்றா?
திரும்பிப்பார் மகனே..
முன்பு எங்கள் வீட்டு
பூனையை அணைத்து
மகிழ்ந்திருக்கிறாய்
நினைவிருகிறதா...??

தொழுவத்தில்
மாடுகளுக்கு வைக்கும்
கஞ்சி கலராய் இருக்கிறது
தினம் தரும் தேநீரை விட..
சத்து உணவு கேக்கவில்லை
சாகடிக்க தந்தால் போதும்
செத்து விடுகிறேன்....
வங்கியில் காசிருக்கு..
காப்புறுதியும் செய்திருக்கு..
அது போதும் உனக்கு
சுடலை வரைக்கும்...

--------

குழந்தாய் பாவம் உங்கப்பா
தாங்கமாட்டார்..
தொழில்நுட்பம் வளர்ந்தாலும்
மனசெல்லாம்
மெசின் ஆகிப்போனாலும்..
முதியோர் இல்லம்
நிச்சயம் இருக்கும்..
அங்கே விட்டு விடுங்கள்..
அவனாவது நிம்மதியாய்
இருக்கட்டும்..!!

தமிழ் நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home