Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காதல் சாரம்..! - இதுவும் கீதை

7 comments

காதல் சாரம்..! - இதுவும் கீதை இந்த தலைப்பை பார்த்து பலர் பலவிதமாக நினைக்கக் கூடும். குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை மதங்களால் அணுகவேண்டாம்.இது காதலில் தோற்ற ஒருவனை பழைய நிலைக்கு கொண்டு வருவதாக நகைச்சுவைக்காக எழுதியது அதனால் தப்பு இல்லை என்பது என் கருத்து..
படிக்கும் காலத்தில் நண்பர்களால் விரும்மப்பட்ட ஒன்று. அதன் காரணத்தினால் முதன் முதல் முகப்புத்தகத்தில் பிரசுரித்தேன். உங்களுக்காகவும்...

முக்கிய குறிப்பு - இதை வாசிக்கும் பெண்கள் அவள் என்பதற்கு அவன் என்றும், வேறொருவளை என்றும். "ஏன் தாடி வளர்க்கிறாய்" என்பதற்கு "ஏன் கண்ணீர் வடிக்கின்றாய்" என்றும் காதலிக்கு பதிலாக காதலன் என்றும் பயன் படுத்தவும்.

காதல் சாரம்...

யாரை நீ காதலித்தாயோ
அவள் வேறொருவனை காதலித்தாள்..
யாரை நீ காதலிக்கின்றாயோ
அவள் வேறொருவனை காதலிக்கின்றாள்..
யாரை நீ காதலிக்க போகிறாயோ...
அவளும் வேறோருவனையே காதலித்திருப்பாள்...
உன்னுடையது எதை இழந்தாய்
ஏன் தாடி வளர்க்கிறாய்
யாரை நீ கொண்டு வந்தாய்
அவளை நீ காதலிக்க
யாருக்கு நீ காதலை சொன்னாய்
அவள் உன்னை காதலிக்க
யார் உன்னை காதலித்தாள்
நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க
காதலை எங்கிருந்து பெற்றாய்
அது இங்கேயே பெறப்பட்டது
யார் என்று உன் காதலியோ
அவள் நாளை
மற்றொருவனுடையதாகின்றாள்
மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையதாகின்றாள்.

இதுவே காதலின் நியதியும்
சாரமும் ஆகும்.
sanjay
தமிழ் நிலா
2005/07/16

நண்பர்களுக்கு வணக்கம்...!!

எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோஒருவன், தமிழ்நிலா, சஞ்சய் (sanjay ) எனும் பெயர்களில் எழுதுவதை, அவற்றின் பெயர்களை நீக்கி தங்களுடயதகவே இடுகிறார்கள்.. என்னால் பெயர் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில உத்தமர்கள் மட்டுமே என்னை கேட்டு அதுவும் அதே பெயருடன் பதிகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

மேலும் நான் சில நண்பர்களை வினாவ அவர்கள் தொடர்பை துண்டிக்கிறார்கள்.. ஏன் என புரியவில்லை.. அவர்களை பெயர் இட்டு குறிப்பிட விரும்ப வில்லை. "காதல் சாரம்" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு விடயம் அநேகரின் முகப்புத்தக பகுதியில், பல இணையத்தளங்களில் காண்கிறேன். காதல் கீதாசாரம்.., யாரை நீ காதலித்தாயோ... போன்ற தலைப்புக்கள் அங்கெ உண்டு, அவற்றில் அநேகமானவற்றில் பெயர் நீக்கப்பட்டு தங்கள் பெயர் போடப்பட்டுள்ளது. சிலவற்றில் இல்லை.

அத்துடன் இவாறு நடப்பதை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும்.. கீழ் உள்ள இணையத்தள இணைப்புக்களை மின் அஞ்சலில் அனுப்பிய உறவுக்கும், இதுவரை எனக்கு ஆதரவு வழங்கி விமர்சனங்கள் தந்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...

மின் அஞ்சலில் வந்த சில இணைப்புக்கள்.. அனுமதி இன்றி பிரசுரித்தவர்கள்..
  • யாழ் இணையம்
http://mylankans.blogspot.com/2011/10/blog-post_11.html
  • சாரளம்
http://www.challaram.com/?idb=MTcwMQ==&db5=NjY=&act=aW1nX2FsbA==
https://www.facebook.com/permalink.php?story_fbid=280050712038993&id=185256104851788
  • தமிழ் நாற்று comment பகுதியில் M.Shanmugan
http://www.thamilnattu.com/2011/11/blog-post_28.html?showComment=1322462965392#c8997929005104788287
  • நான் யாரையும் கொப்பி அடிப்பதில்லை!
http://nanbaenda100.blogspot.com/2011/03/blog-post.html
  • Medona Sethu (Sedhu)
http://medonasethusedhu.blogspot.com/2011/05/blog-post_5705.html
  • Sri Lanka One 
என் மழலை மொழிகள் சில.... பதிவில் "காதல் கீதை" தலைப்பில் உள்ளது எழுத்தின் நிற மாற்றம் காரணமாக தெரியவில்லை.
http://srilankaone-jina.blogspot.com/2009/09/blog-post_10.html
  • ₮₮>> ♥ தர்ஷன் ♥
http://tharshan10.blogspot.com/2011/07/blog-post_79.html
  • சுதர்ஷனின் காதல் கவிதை...
https://www.facebook.com/topic.php?uid=273628807585&topic=14649


சாதாரணமான என் கவிதைகளை தங்கள் சிறந்த இணையங்கள், முகப்புத்தகங்களில் பிரசுரித்த எல்லா உறவுகளுக்கும் நன்றி.


அன்புடன் sTn
Next PostNewer Post Previous PostOlder Post Home

7 comments:

  1. Anonymous8:23:00 am

    மீள் பிரசுரிப்பவர்கள் அடுத்தவரின் பெயரையும் போடலாம் தானே...

    ReplyDelete
  2. களவாடப்படுவது கவிதை அல்ல கற்பனைகள்...sanjay

    ReplyDelete
  3. அமுல் பேபி நல்ல இருக்கு

    ReplyDelete
  4. @உயிரே..உண்மை தான்.. உரிமையுடன் பிரசுரிக்கலாம்

    ReplyDelete
  5. @shamநன்றி அக்கா...

    ReplyDelete
  6. கீதையில் காதல் விளக்கம்... தூள் மச்சி

    ReplyDelete
  7. @Rameshநன்றி றமேஸ்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா