மொரிசியசு அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. ஆட்சி மொழி - ஆங்கிலம்.
மொரிசியசில் ஏறக்குறைய 30 000 தமிழர்கள் வாழ்கின்றனர். இந்த நாட்டின் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள நாணயம் மொரிசியசு ரூபாய் என அறியப்படுகின்றது. இதில் ௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯ முறையே 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ய் குறிப்பிடுகிறது.
உதாரணத்திற்கு ஐம்பது ரூபாய் நாணய தாள்களில் ஐம்பது ரூபா எனவும் எழுதப்பட்டுள்ளது..
ஆட்சி மொழி - ஆங்கிலம்
நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
1968ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.
மொரிசியசு தீவு நீண்டகாலமாக அறியப்படாமலும், மனிதவாசமின்றியும் இருந்தது. முதன்முதலில் மத்திய காலப்பகுதியிலே அராபியக் கடலோடிகள் இங்கு வந்தனர். அவர்கள் மொரிசியசை 'தினா அரோபி' என அழைத்தனர். 1511ல் இங்கு வந்த போர்த்துக்கேய கடலோடி டொமிங்கோ பெர்ணான்டசு பெரேரா இங்கு கால்பதித்த முதலாவது ஐரோப்பியராகக் கருதப்படுகிறார். போர்த்துக்கேய வரைபடங்களில் இத்தீவு 'செர்ன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1598ல் அட்மிரல் வைபிராண்ட வான் வார்விக் தலைமையிலான ஒரு டச்சு கப்பற்படைப்பிரிவு கிரான்ட போர்ட்டில் தரையிறங்கியது. பின் அத்தீவு ஒல்லாந்தின் தலைவரான மொரிசு வன் நசாவுவின் பெயரால் மொரிசியசு எனப்பட்டது. எனினும் 1638லேயே முதலாவது டச்சுக் குடியேற்றம் அமைக்கப்பட்டது. 1810 பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியசு 1968ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.

உதாரணத்திற்கு ஐம்பது ரூபாய் நாணய தாள்களில் ஐம்பது ரூபா எனவும் எழுதப்பட்டுள்ளது..
மொரீசியசு நாட்டில் ஒரு தடவை அந்த நாட்டு அராசு அந்த நாட்டு நாணயத்தில் தமிழ் மொழியினை பயன் படுத்துவதை நிறுத்தியது உடனே அந்த நாட்டு தமிழர்கள் போரட்டத்தில் இறங்கினர், இதனால் மீண்டும் நாணயத்தில் தமிழ் மொழி இணைக்க பட்டது என ஒரு தகவலும் உள்ளது.
ஆட்சி மொழி - ஆங்கிலம்
பிரதேச மொழிகள் - மொரிசியசு கிரெயோல், பிரெஞ்சு, இந்தி, உருது, தமிழ்,
மாண்டரீன், தெலுங்கு, போஜ்புரி
அன்புடன் sanjay தமிழ் நிலா
நம் நாட்டில் தான் தமிழனை மதிகிறாங்க எல்லை.
ReplyDeleteதமிழர்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் இது.
ReplyDelete