Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

ஓ மனிதா.....

3 comments

புதிய வருடம் பிறந்துவிட்டது. கடந்து வந்த வருடங்களில் எத்தனையோ இன்னல்களை மட்டும் அனுபவித்து வந்தோம், சந்தோசங்களை சிலர் அனுபவிக்காமலும் இல்லை. ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு பண்டிகை நாள் தான் எமக்கு. புதிய ஆண்டின் முதல் கவிதை.
புதுவருடம் அன்று பலஉறுதிமொழி எடுத்துகொள் மனிதா

ஓ மனிதா..
தூங்குகிறாயா
தூங்குவது போல் நடிக்கிறாயா..??
தூங்குபவனை எழுப்பி விடலாம்..
உன்னை..???

சேரிகள் அழகாகின்றன
நகரங்களில் சாக்கடை ஓடுகிறது 
வீதிகள் நரகமாம் 
உன்னால் தானாமே...

பேருக்கு தானம் தாலி
போருக்கு பின் எல்லாம் மாற்றம்
பிள்ளைக்கு யார் அப்பா
தாய்க்கே தெரியாதாம்..
வீதி செல்லும் 
பெட்டை நாய்களுக்கு பாதுகாப்பு..
தெரு நாய்களாம்..??

யாழ்ப்பாணத்து சந்தையில் 
மரணங்கள் மலிவாம் 
கற்பழிப்புக்கு கொலை இலவசமாம்
அகால மரணங்கள் 
அடிக்கடி நடக்கிறதாம்..

காரணம் ....!!

கைசேரா காதலா..
எல்லை தாண்டிய காமமோ..
அடம்பரமோ, பழி வாங்கலா..
திட்டமிட்ட சதியோ இல்லை
முன் ஜென்ம பாவமோ..???
என்னவாயிருக்கும்..???

உன் பங்கு ஏதும் இதில் உண்டா..??

ஓ மனிதா...

வீட்டு தாம்பத்தியம்
வாகனத்துக்குள் நடக்கிறதாம்..
ஆஸ்பத்திரி வாசலிலே
கூட்டம் கனக்கிறதாம்.
சட்டமாகிறதாம்
சட்டவிரோத கருக்கலைப்பு...
உலக சனத்தொகை 
எழுநூறு கோடியாம்

என்ன செய்யப்போகிறாய்..???

திரையரங்க போஸ்டேர்க்கு
தினம் பாலாபிசேகமா???
ஒரு நேர உணவின்றி 
உலகம் எல்லாம் ஒரு கூட்டம்
நாளும் செத்து மடிகிறதே 
தெரியாதா..??

கோவில் கோவில் என்று
காசு கொட்டுகிறாய்..
இல்லாத கடவுளுக்கு 
எங்கிருந்து வரும் இரக்கம்..
யுத்தத்தில் புத்தம் எங்கே..
சண்டையில் சாமி எங்கே
யேசுவும் அல்லாவும் 
எங்கேயாம் போனார்களாம்..??

காவல் தெய்வம் என்றால்
காவலுக்கு தானே..
காவல் தெய்வத்துக்கே 
காவல் வைத்துவிட்டாய்..
இப்போ இங்கே
கடவுளையே
களவாடுகிறார்களே.. நீ
என்ன செய்ய போகிறாய்..??

புதிதாக திறக்கிறார்களாம் 
அநாதை இல்லங்களும்
முதியோர் இல்லங்களும்...
இருந்தும் அங்கே
முற்பதிவுகள் முடிந்து விட்டதாம்..???

வயல்கள் சம்பல் மேடாம்
பச்சை பூமிக்கு சம்பல் வண்ணம் 
எப்படி வந்தது..??
ஓசோனில் எப்படி ஓட்டை 
உன்னால் தானே மனிதா 
என்ன செய்யப்போகிறாய்...???

புதிதாய் கவிஞர்கள் 
வந்துவிட்டார்களாம்..
தமிழுக்கே தட்டுப்பாடு..
இருப்பதை கொண்டு 
தடுமாறி எழுதுகிறேன்...

ஓ மனிதா
புதுவருடம் பிறந்து விட்டது...
தூங்கினால் எழுந்துவிடு...
நடித்தால் முடித்துவிடு...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் -உயிர்த்தமிழ்  

அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

  1. மிகவும் அருமை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @sasikalaநன்றி ... உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி..

    ReplyDelete
  3. Lyricist satheeskanth8:05:00 pm

    சிறந்த கவிதை...!புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ் நிலா :-)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா