Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கவிஞர் நிலாந்தன்

2 comments

நிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் இலக்கியம், அரசியல் தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். ஈழம், அதன் பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் ஆராயுமொரு ஆராட்ச்சியாளரும் கூட...

இவரது கவிதை நூல்கள்

1. மண்பட்டினங்கள்
2. யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே
3. வன்னி மாபன்யம்
4. யுக புராணம் இனி வெளிவர இருக்கிறது.


நூல் விபரம்


அண்மைக்காலத்தில் தமிழில் வெளிவந்த படைப்புக்களில் மண்பட்டினங்கள் மிகவும் தனித்துவமானது. வரலாறு, நாடகம் என்னும் ஊடகங்களிடையே கவிதையை ஓடவிட்டும், கவிதை, நாடகம், வரலாறு என்னும் இலக்கிய உருவங்களின் கலப்பாகவும் மண்பட்டினங்கள் அமைகின்றது. தமிழ்மக்களுக்கு அவர்களின் வரலாற்றுணர்வை ஏற்படுத்தவும், அதன்வழிவரும் எழுச்சியை பிரயோகப்படுத்துவதற்குரியதாக வழிகாட்டும் அரங்க அளிக்கையாகவும் இந்நூலை நிலாந்தன் உருவாக்கியுள்ளார்.

பதிப்பு விபரம்
மண் பட்டினங்கள். விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளி பாளையம்; வடக்கு, சிங்காநல்லூர்,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2000
விலை: இந்திய ரூபா 20.


யாழ்ப்பாணத்தின் பெருமைகளையும், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொண்ட அழிவுகளையும் பேசுகின்றது. கவிதையாகவும், இடையிடையே விவரண உரைகளாகவும் விளக்கக்குறிப்புக்கள் கொண்டமைந்தனவாகவும் அமைந்திருக்கும் 

இந்தப் பரீட்சார்த்த இலக்கியத்தின் மூலம், இன்றைய யாழ்ப்பாணம் தொடர்பான ஒரு முழுமையான காட்சிப்படிமம் எம்முன் விரிகின்றது. 3 பாகங்களில் அமைந்த இத்தொகுப்பில் புதிய யாழ்பாடி, யாழ்ப்பாணம்: பாலைநிலத்தின் புதிர் (பகுதி 1க்கான உரையும் அதன் தொடர்ச்சியும்), கந்தபுராண கலாச்சாரத்திலிருந்து கரும்புலிகள் வரை ஆகிய தலைப்புக்களில் முறையே அம்மூன்று பாகங்களும் விரிகின்றன.

பதிப்பு விபரம்

ஓ.. எனது யாழ்ப்பாணமே! முல்லைத்தீவு: மகிழ்,
புதுக்குடியிருப்பு 4,
1வது பதிப்பு, மார்ச் 2002.
விலை: ரூபா 100.


மண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு.

மண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.

பதிப்பு விபரம்

வன்னி மான்மியம்: மல்லாவி: நியதி,
361, 4ம் யுனிட்;, திருநகர், மல்லாவி,
1வது பதிப்பு, ஐனவரி 2002.
(ஸ்கந்தபுரம்: கன்னிநிலம் பதிப்பகம்).
விலை: ரூபா 100


யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே இல் இருந்து..

புதிய யாழ்பாடி

"ஒரு பாடலுக்குப் பரிசாகத் தரப்பட்ட
தரிசு நிலம் நீ
படையெடுத்து வந்த
எல்லாப் பகைவர்க்கும்
கவர்ச்சிப் பொருளானாய்

இரு ஆறுகளை விழுங்கிய
பாலை நிலம் நீ
உனது தாகம்
ஒரு புதிய வீரயுகத்தின்
பாடு பொருளானது.....


உனது ஜனங்களோ
ஈமத்தாழிகளில் புதைக்கப்பட்டு
புத்திர சோகத்தால்
களையிழந்த நகரத்தெருக்களில்
புனர் சென்ம மெடுக்கிறார்கள்.

நிகரற்ற வீரத்தோடு
ராங்கிகளை மோதிப் புரட்டுகிறார்கள்
பீரங்கிகளைக்
கவர்ந்து வருகிறார்கள்

பாக்கிய சாலி நீ
பலசாலிகளைப் பெற்றவள் நீ
யாழ்ப்பாணமே
ஓ... எனது யாழ்ப்பாணமே
யாருக்கும் பணியாத நிலமே
வணக்கம்
."
....

தொடர்ந்து வெளிவர இருக்கும் யுகபுராணம் நூலின் கவிதைகளில் இருந்து சில பதிவுகள் உங்களுக்காக...

"அது ஒரு யுகமுடிவு
பருவம் தப்பிப் பெய்தது மழை
இளவயதினர்
முறைமாறித் திருமணம் புரிந்தனர்.
பூமியின் யௌவனம் தீர்ந்து
ரிஷிபத்தினிகள்
தவம் செய்யக் காட்டுக்குப் போயினர். *
கள்ளத் தீர்க்கதரிசிகளே எங்குமெழுந்து
கட்டுக்கதைகளை தெருத்தெருவாக
விற்றுத்திரிந்தனர்"

சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல
ஒரு சிறு படகு
பாற்கடலில் வரும் வரும் என்று
சொன்னதெல்லாம் பொய்.
அதிசயங்கள் அற்புதங்களுக்காக
காத்திருந்த காலமெல்லாம் வீண்..."



(*பாரதப்போர் தொடங்க முன்பு வியாசர் தனது தாயிடம் சென்று பின்வருமாறு சொல்வார் “அம்மா பூமியின் யௌவனம் தீர்ந்து போய்விட்டது. நீ இனி காட்டுக்குத் தவஞ்செய்யப்போ” என்று.)


நன்றி விக்கிபீடியா, நூலகம்

அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. சுவாரசியமான விடயப்பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா