Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கலைந்து போன(அவ)வளின் கனவு

6 comments

கனவை தேடி
அலைந்து கொண்டிருந்தாள்
ஒரு தேவதை...

தெருவின் ஓரத்தில்..
பருவத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது..

ஒற்றை மர நிழலில்..
பாசத்தில் தொலைத்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

மணல் திட்டுக்களில்...
பாதியில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...
எதுவுமே அளவுடையது இல்லை...

கடல் தாண்டும் கனவு
துளிர்த்திருந்தது....
ஆனால்
கனவுடன் கடல்
விளையாடிக்கொண்டிருந்தது...

கடலின் அலைகளுக்கிடையில்
கனவுகள்
தத்தளித்துகொண்டிருப்பது தெரிந்தும்,
அவளது கனவு
நீந்தி போக நினைத்திருக்ககூடும்..

கடலின் கரையில்...
பயணத்தில் தொலைந்த
ஒருத்தியின் கனவு கிடந்தது...

இதுவாக இருக்கலாம்..
உதவி கேக்கவும்
இந்த பாதையில் ஒருவரும் இல்லை...

கனவினை அழைத்துப்பார்த்தாள்
எழுந்து வருவதாய் இல்லை...
கனவினை அழைத்துப்பார்த்தாள்
திரும்பி வருவதாய் இல்லை..

கலைந்து போன(அவ)வளின் கனவு
காணாமல் போயிருந்தது...

தமிழ்நிலா

கடல் தாண்டிய பயணத்தில் உயிரை பிரிந்தவர்களுக்காக.
கடல் தாண்டி வாழ்வை இழந்தவர்களுக்காக 
தூக்கம் விற்று சம்பாதிப்பவர்களுக்காக...
Next PostNewer Post Previous PostOlder Post Home

6 comments:

  1. அழகானதும் ரொம்ப வித்தியாசமானதுமான கனவுகள்.
    விழிப்புணர்வு தகவலும் இப்போது மிக அவசியமானதுதான்

    ReplyDelete
  2. அழகானதும் ரொம்ப வித்தியாசமானதுமான கனவுகள்.
    விழிப்புணர்வு தகவலும் இப்போது மிக அவசியமானதுதான்

    ReplyDelete
  3. கவிதையும் தகவலும் பலரும் அறிய வேண்டும்...

    ReplyDelete
  4. நன்றி சிட்டுக்குருவி, நன்றி தனபாலன் ஐயா

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா