Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இன்னொரு கருச்சிதைவுதான்..

16 comments

இன்னொரு கருச்சிதைவுதான்
புளுட்டோணியம் கரு
சிதைக்கப்படுகின்றது....

யுரேனியம் பிளக்கப்படுகிறது,
வளிமண்டலத்தில்,
நிலத்தடியில்,
வான்வெளியில்,
நீரடியில்...
எல்லாமே வெற்றி...
விஞ்ஞானிகள்
சிரித்துக்கொள்கிறார்கள்...

யாருக்கும் தெரியவில்லை..
அத்தனையும் தோல்வி...
கடவுள் சிரித்துக் கொள்கிறார்...

அணுமின் நிலையம்
மின்சாரம் உற்பத்தி செய்யவா...??
இல்லை... இல்லை...
மக்களை அடக்கம் செய்ய..
இலவசமாக சூரியன் இருக்கிறதே...
சூரியனும் அணு உலைதான்
அங்கே இருந்து மின்
எடுத்துக்கொள்ளுங்கள்...

இராவணனை  அடக்கி 
இராமன் ஆக்கமுடியுமா...
இராட்சசன் அடங்கிவிட மாட்டான்...

அணு உலைக்கு 
இத்தனை பாதுகாப்பென்றால் 
அது எத்தகைய கொடியது தெரியுமா...??

விஞ்ஞானிகளே 

கழிவுகளை என்ன செய்வது...
ஆழக்கடல் தாண்டிச் சென்று
சமுத்திரத்திற்குக் கீழே புதைத்து விடுவோமா..?
பூமியில் பள்ளம் தோண்டி
பாறைக்குழம்பில் கரைத்து விடுவோமா...?

இருப்பினும் 
சாம்பலில் கதிரியக்கம் 
நடந்து கொண்டேதான் இருக்கும்...

உங்களுக்காக ஒரு அவசர திட்டம்
அமுல் படுத்தப்படுகிறது..
உங்கள் சேவைக்காய்...

இலவசமாக உங்களுக்கு வீடுகள்..
அணு உலைக்கு அருகில்
இருகிறீர்களா...??

இரோசிமா, நாகசாகி மீது 
நடந்தவர்கள்
"குண்டு மனிதன் "
"சின்ன பையன்..."

நடந்த தடங்களே அழியவில்லை...
எப்படி எத்தனை... எத்தனை....

இதோ மீண்டும் தயாராகிறது
புதிய ஆயுதம்..
பெயரும் இட்டகிவிட்டது
"கடவுளுக்காக"

அணுகுண்டு ஒன்று
இலவசமாக வெடிக்கபோகிறது...

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

16 comments:

  1. nalla
    kavithai!

    naanum ungalai polave-
    anu ulaikalai veruppavan!

    mikka nantri!

    ReplyDelete
  2. nalla
    kavithai!

    naanum ungalai polave-
    anu ulaikalai veruppavan!

    mikka nantri!

    ReplyDelete
  3. அழகு வரிகள்... வேதனைக் கருவில்....

    ReplyDelete
  4. நல்ல வரிகள்...

    கொடுமையை தடுக்க யார் வருவாரோ...?

    ReplyDelete
  5. நல்ல வரிகள்...

    கொடுமையை தடுக்க யார் வருவாரோ...?

    ReplyDelete
  6. நன்றிகள் அண்ணா...

    ReplyDelete
  7. நன்றி சிட்டுக்குருவி

    ReplyDelete
  8. நன்றி தனபாலன் ஐயா

    ReplyDelete
  9. நன்றி தொழிற்களம் குழு

    ReplyDelete
  10. வேதனையை சரியாக கூறியுள்ளிர்கள்

    ReplyDelete
  11. //யாருக்கும் தெரியவில்லை.... அத்தனையும் தோல்வி... கடவுள் சிரித்துக்கொள்கின்றார்// சிந்திக்கத்தக்க நல்ல கவிதை. கடவுளின் படைப்புக்களை மேலும் படைக்க நினைப்பவர்கள் இதுபற்றி சிந்திப்பார்களாக!

    ReplyDelete
  12. நன்றி இரவின் புன்னகை

    ReplyDelete
  13. சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு, நன்றி அண்ணா

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா