
தாய்மை..
விசித்திரமானது,
விபரிக்க முடியாதது...
விநோதமானது,
விளங்கிக்கொள்ள முடியாதது...
தாய்மை..
விரும்பாமல் சிலருக்கும்,
விரும்பி பலருக்கும் வாய்த்துவிடுகிறது...
காமத்தின் சிணுங்கலில் தொடங்கி,
காதலின் சிணுங்கலில் முடிகிறது..
பெண் தாய்மை அடைந்தாள்...
காமம் குழந்தையானது..
குழந்தை காதலானது...
குழந்தை சிறுமியாய்...
குமரி மனைவியாய் வந்தபிறகும்...
தாய்மையை தான் தேடுகிறாள் ...
தாய்மை இனிமையானது...
தாய்மை..
இரவுகளில் தூக்கம் பறிபோகும் என்று
நினைப்பதில்லை..
நீ வந்த பின் சுதந்திரம் பறந்தோடும் என்று
வருந்துவதில்லை...
பத்து மாதம் சுமந்தும் வெறுக்கவில்லை...
புறம் தள்ளுகையிலும் வலிப்பதில்லை....
தாய்மை தனிறைவானது...
தமிழ்நிலா
தாய்மை விசித்திரமானதுதான் , விவரிக்கமுடியாததுதான் . நல்ல கவிதை . நன்றி
ReplyDeleteஓம்! இரவுகளில் தூக்கம் பறி போகும் என்று நினைப்பதில்லை.
ReplyDeleteசுதந்திரம் பறி போகும் என்று நினைப்பதில்லை.
என்று பல நல்ல வரிகள். நல்வாழ்த்து தாய்மையுடன்.
வேதா. இலங்காதிலகம்.
ஓம்! இரவுகளில் தூக்கம் பறி போகும் என்று நினைப்பதில்லை.
ReplyDeleteசுதந்திரம் பறி போகும் என்று நினைப்பதில்லை.
என்று பல நல்ல வரிகள். நல்வாழ்த்து தாய்மையுடன்.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி ஞானம் சேகர் ஐயா
ReplyDeleteநன்றி வேதா மேடம்
ReplyDeletenalla varigal
ReplyDeleteஅருமையான தாய்மை பற்றிய கவிதை!
ReplyDeleteநன்றி Yamini Prashant acca, தனிமரம்
ReplyDelete