Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இன்னும் சில நிமிடங்களில்...

5 comments

காணாமல் போன ஒன்று
யாரும் காணாமல்
கிடக்கிறது
அடித்து, தூக்கி வீசி
நான்குமுறை நான்குசக்கரங்கள்
ஏறிச்சென்றபின்னும்
எதிர்பார்ப்புகளுடன்
மறுபடியும் துடிக்கிறது இதயம்..

ஒரு நண்பகலில்
இரத்தம் சிந்தி,
காய்ந்து, வறண்டு,
தாரோடு தாராய் போய்
தூசி கிளம்பியும்
இன்னும் துடிக்கவில்லை
சிலரது இதயம்..

மாடுகளின் சாணத்தை
சில்லுகள் வாரி அள்ளிச்
செல்வதுபோல்
சிதறிய மிச்சத் சதைகளை
மிதித்து செல்லுகின்றன
வண்டிகள்..

தெருநாய்களும்
கூடிவிட்டன
இன்னும் சில நிமிடங்களில்
மனிதம் செத்துவிடும்..
தூக்கி கரையிலாவது
போட்டுவிட்டு போங்கள்..
காகங்கள்
காவல் இருக்கின்றன..

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

5 comments:

  1. இதே போன்ற ஒரு நிகழ்வை
    நினைவுபடுத்தி வேதனைப் படுத்திப் போனது
    தங்கள் கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இதே போன்ற ஒரு நிகழ்வை
    நினைவுபடுத்தி வேதனைப் படுத்திப் போனது
    தங்கள் கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அண்மையில் எங்கள் இடத்தில் நடந்த நிகழ்வு. நான் வெளியூரில் இருந்தேன், கேள்வி பட்டபோது உறுத்திக்கொண்டது மனது.. நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா