Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

குழந்தை Vs கடவுள்

4 comments
குழந்தை Vs கடவுள்
(சென்ரியூ)


உண்டியலும் போதவில்லை
ஊத்தும் பாலும் போதவில்லை 
திருவோட்டுடன் கடவுள்.


தேவலோகத்திலும் ஊழல் 
கஜானாவும் காலி 
கைநீட்டும் கடவுள்.



அரக்கர்களின் பூமி
கோவில் கட்ட இடமும் இல்லை 
தெருவோரத்தில் கடவுள்.. 


கருவறையில் தங்கச்செருப்பு 
வாசலில் பலவகைச் செருப்பு 
வெறும் காலுடன் கடவுள்.. 


கொடுத்துக் களைத்த கடவுள்
வாங்க மறந்த இனம் 
குழந்தை 

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. படத்திற்கேற்ற வலிகள்...

    ReplyDelete
  2. ஐயோவென்று மனம் பதறச் செய்யும் படங்களோடு வலி கூட்டும் வரிகள்! கடவுள்களைத் துரத்திவிட்டு வெறும் ஆலயங்களை மட்டும் கும்பிட்டுக்கொண்டிருக்கிறோம் நாம்.

    ReplyDelete
  3. Anonymous7:34:00 am

    கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்குறியை இவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. மிக்க நன்றி

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா