Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நமக்காக நாம் அமையம்

1 comment

நமக்காக நாம் அமையம் - யாழ் மாவட்டம் தென்மராட்சி சாவகச்சேரியினை தலமை அலுவலகமாக கொண்டு வடக்கு மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய ரெலோ சர்வதேசத்தின் கீழ் இயங்கும்  ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். 

கடந்த 2017 இல் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது அனைவரினையும் ஆரம்பம் முதலே கவர்ந்திருந்தது. இக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு  நிதிப்பங்களிப்பினை ரெலோ சர்வதேசம் சுவிஸ் வழங்கியிருந்தார்கள். குறிப்பாக சேகர் மற்றும் செல்வா மற்றும் அவர்களுடன் இணைந்து இன்னும் பல உறுப்பினர்களும்  முழு ஈடுபாட்டுடன் இயங்குகின்றார்கள். அவர்களின் சார்பாக எஸ் ஏ நிலான் அவர்கள் இலங்கையில்  பொறுப்பாளர்களாக செயற்பட்டு வருகின்றார்கள். 

2017 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள். 

1. தென்மராட்சியில் அமைந்துள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை ஆன, மகளிர் கல்லூரியில் கற்கும் 25 மாணவர்களுக்கு தலா 2500.00 ரூபா பெறுமதியான காலணி, புத்தகப் பை, கொபிகள், போன்றன வழங்கப்பட்டது. அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க மிகவும் வறிய நிலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 




2. கிளிநொச்சி மாவட்டம், பூநகரியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் 30 மாணவர்களுக்கு தலா 2500.00 ரூபா பெறுமதியான புத்தகப்பை, கொப்பிகள், நீர்ப்போத்தல், மதிய உணவுப்பெட்டிகள் என்பன வழங்கப் பட்டன. கல்லூரி அதிபர் திரு லெனின்குமார் தலைமையில், நமக்காக நாம் குழுவினரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது. 





3. திடீர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட J/109 கிராம சேவகர் பிரிவு, சங்கிலியன் தோப்பு யாழ்ப்பாணம், பகுதியில் வெள்ள நிவாரண உலர் உணவுகளை உடனடியாக வழங்கி இருந்தார்கள். மொத்த வழங்கல் செலவு ரூபா 25000.00 இற்கு அதிகமாக இருந்தது. கோதுமை மா, அரிசி, பருப்பு, சீனி, பால்மா போன்ற அத்தியாவசிய பொருள்களை இனங்கண்டு வழங்கியிருந்தார்கள்.




4. வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த யுத்தத்தில் விழுப்புண் அடைந்த குடும்பத்தை சேர்ந்த அம்பன் அமெரிக்கன் மிக்ஷன் தமிழ்க்கலைவன் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. 


5. கைதடி எருத்திடல் தமிழ்க்கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவுடன் இணைந்து மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கான கற்றல் உபகரணங்களும், இன்னும் சில மாணவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.




6. யாழ் நாவற்குழி அரும்புகள் முன்பள்ளி பரிசளிப்பு விழாவின்போது மழலைகளுக்கான ஆரம்பக்கல்வி பாடசாலைகளுக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.




 S.A.நிலான் 
பொறுப்பாளர் 
நமக்காக நாம்
ரெலோ சர்வதேசம்
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

  1. Anonymous8:27:00 am

    1xbet korean sports betting - Legalbet.co.kr
    1xbet is a popular online sportsbook and offers football betting, horse racing 1xbet 가입 betting, betting on horse racing, and more.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா