Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நட்புக்காலம் - சிறுகதை

Leave a Comment

( யாவையும் கற்பனையே...)

இரவு விடிந்துகொண்டிருந்தது, நேரம் மூன்று மணியை தாண்டியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான், தலையணை மட்டுமே அவனிடம் அடைக்கலமாய் கிடக்க சாமத்து கோழிகளை போல் மனம் கூவிக்கொண்டு இருந்தது.



 கண்களின் கண்ணீரை துடைக்கும் நண்பனாய் மாறிவிட்ட பொழுதில் அவன் கண்கள் மெல்ல அயர்கிறது. "டிங்  டாங்" "டிங்  டாங்" "டிங்  டாங்" திடீர் என்ற ஒரு சத்தம் சுவர் மணிக்கூடு மூன்று மணி என்பதை கூறியது.


தனது இன்பங்களை எங்கோ தொலைத்துவிட்டு, சந்நியாசம் போன துறவியை போல் மீண்டும் எழுந்து அடுத்த நாளுக்கு ஆயத்தமாக மேசையின் உள்ள கொப்பியை பார்த்தபடி இருந்தவன், தான் யாருக்காக வாழ்ந்தானோ அவர்கள் தன்னை வெறுத்து விட்டார்கள் என்று மனம் வெதும்பியது. கொப்பிகளின் வசனங்களினுடே வேறோர் உலகை நோக்கி பயணித்தான்.

          உயர்தரம் வந்த அவனுக்கு பலகனவுகள் குடிகொண்டிருந்தது. சாதாரண தரத்தில் இருந்த சந்தோசமான நண்பர்கள் நால்வரும் நாலு பக்கமும் சிதறி விட்டார்கள். அந்த நட்பு இனி என்றும் சிதையாது என்ற நம்பிக்கை மட்டும் சிதையாமல் இருந்தது. ஆனால் நடந்தது என்னவோ என்பதை நினைக்கையில் மட்டும் தலை சுத்துவதைப்போல் உணர்ந்தான். தனது வாழ்கையில் புதிதாக இணைந்ததில் ஒன்று இரண்டு நட்புகள் மட்டுமே மாறவில்லை என்ற சின்ன சந்தோசம் மட்டுமே நிம்மதியை தந்தது.

"டேய் என்னடா செய்கிறாய் ....."

என்ற அதட்டல் சத்தம் கேட்டு தன்னை மறந்த நிலையில் இருந்து மீண்டான். தந்தை தன் புராணத்தை பாட தொடங்கினார்.

"உன்னை பெத்து என்னத்தை கண்டேன் ..."

என்று நீள தாய் தன் ஆதரவையும் கொடுத்து தந்தையுடன் கூட்டணியிட்டு

"உனக்கு என்னடா குறைய வச்சோம்?"

என தொடங்க, வக்கீல் இல்லாத நிரபராதியை போல்  தனக்காக தானே கதைக்க தொடங்கினான் ரவி.

"அம்மா வராத படிப்பை வா எண்டா என்னண்டு வரும், என்னால ஏலாது.... என்னை  நிம்மதியா விடுங்கோ.."

யார் தான் கேப்பார்கள் இதை. எலோருடைய அதட்டலும் அவனை நிலைகுலைய வைத்தது. கண்களில் நீர் முத்தமிட அவன் மீண்டும் கட்டிலில் படுத்தான். அன்று காலை வகுப்புகளுக்கும் அவன் விடுமுறை குடுத்துவிட்டான்.

ஏன் தனக்கு எப்படி என்று எண்ணியவன் தனது பழைய சந்தோஷ வாழ்வுக்கு மெல்லமாக அடியை எடுத்துவைத்தான்.

அழகிய உலகத்தில் நிலையில்லா வாழ்க்கை வாழவந்த அவனுக்கு மட்டும் தான் எதுவுமே நிலையில்லாமல் போனது. சாதாரணத்தை சாதாரணமாக கழித்த அவனுக்கு உயர்தரம் ஆரம்பம் அமோக வரவேற்பு அளித்தது. தனது கற்பனைகளை நிஜமாக்கும் தொழிற்சாலை நோக்கிய பயணம் ஆரம்பம்.

முதல் நாள் முத்தான நாள். அனைவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் கூறி ஆரம்பித்த பயணத்தில் இவன் மட்டும் இடையில் இறக்கிவிடப்பட்டது ஏனோ ???

தான் தனிமை என்று அவனாகவே விளங்கிக்கொண்டான் அவனது நண்பர்களின் நடத்தைகளில் இருந்து. அவனாகவே அவர்களிடம் இருந்தும் விலத்த தொடங்கினான். இதை எதிர்பார்த்த அவர்களுக்கு சந்தோசம். ஒருவனின் வீழ்ச்சியில் சந்தோசப்படும் உலகம் அல்லவா இது. இது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

"நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும் எம் வாழ்க்கை பாதையில் என்றென்றும் நிழலை போலே தொடரும் நம் நட்பின் பெருமைகள்......."

தொலைபேசி அழைப்பு வருகின்றது. தனது கல்லுரி நண்பர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக அழைப்பு தொனியில் ஒரு நண்பன். தன்னை ஏதும் வேலைக்காரன் போல் நடத்துவான என நினைத்து பயந்து பதில் அளிக்காமல் நிறுத்தி விட்டான் ரவி. அந்த பாடல் கேட்ட நொடியில் வருடங்கள் நகர்ந்து தான் பழைய உலகுக்கு போய் விட்டான். அழகிய கல்லூரி நாட்கள், இனிமையான நண்பர்கள், ஆசிரியர்கள் நிறைந்த வாழ்வில் பூ ஆக நினைத்து மலர்ந்த மொட்டு அவன். பூக்கமுன் வாடிய பூவும் அதான்.

படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி கல்வி கற்ற அவனை சுற்றி நிறைய நண்பர்கள். எந்த பிரிவினையும் நட்புக்கு எல்லை இல்லை என கொள்கை கொண்டு வாழ்ந்த அவனுக்கும் நண்பர்களுக்கும் பெரும் சுவராக அந்த கல்வியே அமைந்தது. காரணம் அவன் செய்த ஒரே ஒரு தப்பு அந்த நட்பு. இருந்தாலும் என்றும் ஏரளமான நட்பு அவனுக்கா இருக்கும். முன்பெல்லாம் நண்பர்களுக்காக வீட்டில் சண்டை, இபோது அதையே வைத்து பெறோர் சண்டை.

"அவனுக்காக சண்டை..பிடிச்சாய்... பார் இப்ப உனோட யாரும் சேரேல... "
"படிப்பறிவில்லாத உனோட யார் தான் சேருவாங்கள்... .."

பாவம் அவன் என்ன செய்வான். எதனை செய்ய முடியும், இதை சொல்ல முடியுமா பெற்றோரிடம். தனுக்குள்ளே பூட்டி வைத்து வெதும்பினான்.

முன்பெல்லாம் பெண்கள் என்றால் எதிரிகளாய் பார்க்கும் அவனுக்கு கிடைத்த முதல் தோழி. அன்றுவரை இல்லாத ஒரு சொந்தம். எல்லா பெண்களும் தப்பானவர்கள் இல்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள் என கூறி வந்த அவளின் வரவு நல்வரவு. நல்ல தோழியாக வந்தவள் நெடுநாள் நிக்கவில்லை. 

ஒரு முறை நண்பனின் பிறந்த நாளுக்கு செல்லும் சமயம் இராணுவத்தினரிடம் அப்கபட்ட போது, மிகவும் வருந்தியவள். பிற்காலத்தில் அவனை வருந்த வைத்தது விட்டு சென்றுவிட்டாள். அவளும் அவனுக்காகவே வாழ்ந்தாள், உண்மையான ஒரு நட்புக்காய் வாழ தொடங்கினான். அவள் ஒரு தாயை போல் பாசமாக இருந்தாள். அவனது நட்பும், அந்த நெருக்கமும் யாருக்கும் பிடிக்கவில்லை. அவனது நண்பர்களே எமனாயினர். நண்பர்களின் அழகான ஒரு பொய் சிதைத்தது அந்த நட்பை..

"ரவி அவளை லவ் பண்ணுறானாம் டா.."

"அவளும் தானாம் அவன்ர வகுப்பு பெடியள் சொன்னவங்கள்....."

அவளது நண்பிகளும் இப்படி அவளிடம் கேக்க மறுத்து விட்டாள். இரவு வந்த குறும்செய்தி. நட்பினை கூறியது. 

"எங்க பிரண்ட்ஷிப் எங்களுக்கு தெரியும் தானேடா, யாருக்கும் ஏன் பயப்படுவான்.... நான் உனக்கு உண்மையா இருப்பன் என்னை நம்பு...."

தனக்குள் ஒரு கற்பனை. தன் நட்பு அழியாது என்று. இது வேதவாக்கு போல் எங்கும் நிறைந்திருந்தது. திரும்பிய இடம் எல்லாம் எதிரொலித்தது. எக்காலத்திலும் யாருக்காகவும் பிரியக்கூடா என்றும் சொன்னவள். ஒரு நொடி கூட யோசிக்காமல் முடிவை மாற்றினாள். அடுத்தடுத்த நாட்களில் வராத குறும் செய்திகள், கண்டும் சிரிக்காத முகம், அந்த மாற்றங்கள் பல உண்மைகளை கூறியது. நட்பினை புரிய வைக்க பட்ட வேதனைகள் எத்தனை.  நெருப்பினால் காயம் இட்டு, தப்பான நட்பினை ஞாபக படுத்தி தடமாக்கி விட்டான், கல்லூரிக்குள் காலையில் கால் வைக்க நண்பர்கள் தொடுத்த கேள்விக்கணைகள் அம்பாக பாய, அவன் இதயம் சிதைந்தது.. 

"என்ன மச்சான் அவள் கோவமாம்..."

"என்ன பிரச்சனை......"

"சொல்லுடா நாங்க பாக்கிறம்..."

"லவ் பண்ணுறியாம் உண்மையா..??"

"சொல்லவே இல்லை..."


பிரிவதற்கு காரணமானவரின் அன்பான வார்த்தைகள். நயவஞ்சகர்களின் ஆறுதல்கள். சகிக்க முடியாமல் வகுப்புக்குள் கால் வைத்தான்..

செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்க தொடங்கினான். அவள் சுயநலத்தோடு கதைக்காம விட்டாள் உண்மையில் அவளுக்கு நட்பு இல்லை என பின்னாளில் உணர்ந்து கொண்டான். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? ஒவ்வொருவரின் குத்து கதைகளும், நக்கல்களும். அவனை மாற்றியது, பாடசாலை போவதை குறைத்தான், படிப்பை ஏமாற்றினான். வாழ்க்கையே அவனை ஏமாற்றி விட்டது..

படிப்பை புறம் தள்ளி, ஒரு பைத்தியகாரன் போல் ஆனான். நட்பின் ஆழத்தை புரியாத அத்தனை பேரின் சாபமும் ஒரு உண்மையான நட்பினை எரித்தது. ஒரு இரு நண்பர்கள் மட்டுமே அவனை புரிந்து, அவளிடம் பரிந்து பேசினார். அவள் உண்மையாக இருந்திருந்தால் தானே நட்பு புரிய. காலம் எல்லாம் காயாத காயம் மட்டும் நெஞ்சில். அது நெஞ்சை கருக்க தொடங்கியது.

பரீட்சைகள் தாண்டி சோதனைகள் கடந்து வாழ்வில் தோல்வி அடைந்தான்.... நண்பர்கள் சுமையாக நினைத்தார்கள். விலகினார்கள். அவனுடன் இருந்த, வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாம்.. அதை மறந்தார்கள். நட்பினையும் மறந்தார்கள். அவனை கண்டால் விலகிட தோன்றுது அவர்களுக்கு. அவர்கள் அவனை நக்கலாவே பார்த்தார்கள்.

பனையால் விழுந்தவனை மாடு மிதித்தது போல் வீட்டிலும் நிம்மதி இல்லை. தினம் பல வதைகள். அப்பா கூறும் வார்த்தைகள் உயிருடன் புதைப்பவை... தன் அறைக்குள் இருந்த அவனுக்கு, வீட்டில் எதோ சத்தம் கேட்டது. காதை குடுத்து கேட்டான்.


"உன்னால நான் கலியாண வீட்டை, செத்தவீட்ட போகேலதாம்.

ரோட்ல தலையே காட்டேலாம கிடக்கு.."

என்று அப்பா கூறிக்கொண்டு அவனை விலத்தி சென்றார். ஒரு சொட்டு கண்ணீர் மேசையை நனைக்க, கண்களை கைகளால் துடைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.. நேரம் பத்து மணியை கடந்து விட்டது. கடைக்கு போவதற்காய் ஆயத்தமானான். 

"எதோ கிளிச்சவன் மாரி உடுப்பு போட்டு ஊர்மேய போறார்... சாப்பாட்ட குடன் அதானே மிஞ்சின சொத்து..."

உடுப்ப போட்டு சோ காட்டி என்னத்தை கண்டனி...

நீ என்னை கொல்ல வந்தனி.."


என்று தொடங்கினார் ... இதை சற்றுமே எதிர்பாராத ரவி


"என்னால உங்களுக்கு கஸ்ரமா? சாப்பாடு தரேலா, வீட்டால போ எண்டா போறேன்..."

அம்மா உங்களுக்கு கூடவா புரியல..." என்ற ரவி சாப்பிடாமல் கிளம்பினான்..

சைக்கிளில் போகையில் துரத்தில் வரும் நண்பன் வேகத்தை குறைத்து கொண்டு அருகில் வந்து

"என்ன மச்சான் ரிசல்ட்ஸ்...?" என ஏதும் தெரியாதது போல் கேக்க,

"காணாதடா அத விடு நீ என்ன செய்யிறாய்?" கேட்ட ஒரு நண்பனின் கேள்விக்கு பதில் கூறி விட்டு போகும். அவனை நோக்கி போகும் வழியில் அனுதாப கனிகளை உண்பதற்கு கொடுத்தான் தலைக்கனம் ஏதும் இல்லாத இன்னொரு நண்பன்.

"நீ என்ன செய்யிறாய்..."

"முந்தி எப்படியடா படிச்சாய், ஏன்டா அவளை பாத்தாய்....."

" நீ என்ன டா ... அவள பிரண்டா தான் நினைச்சன்.. இப்பவர பிரண்டா தான் இருக்கிறான்...

எனை பொறுத்தவரை நான் உண்மையா இருக்கன். அவளுக்கு எல்லாம் மறைக்காமல் சொன்னான்,

காதல் வந்திருந்தா அதையும் நானே சொல்லியிருப்பன்...."

"அவளுக்கும் அது தெரியும், ஒருநாள் எடுத்த தப்பான முடிவால ப்ரண்ட்ஷிப்ப தப்பாகிட்டு, ஸ்கூல் முடிய கதைகிறன் எண்டவள். ஆனால் கதைக்க முடியாம இருக்காள் போல,

அப்படி அவள் கதைச்சாலும் நான் கதைக்கன்... என் உண்மை நட்பினையே சந்தேகப்பட்டவள் தானே..

"புரிஞ்சு கொள்ளடா..." என்றான் ரவி.

"சாரி .. ரவி.. எனக்கு உன்னை பற்றி தெரியும்..

உன் மனச கஸ்ரப்படுத்தினதுக்கு மன்னிச்சுக்கொள்ளுடா..."

வருந்திய நண்பனை பார்த்து,

"டேய் நீயே கடைசி ஆளா இருந்தா இனி சந்தோசம்...

வேற யாரும் கேக்காட சந்தோசம்..."


என கூறி விட்டு வீடுக்கு சென்றான். நாட்கள் நகர்ந்தது. காலச்சக்கரம் வேகமாக கடந்தது. இன்று வரை துடைக்கப்படாத அந்த களங்கத்தை சுமந்து வாழும் அவன்... இழந்த வாழ்வை மீட்க புது பயணத்தை தொடங்கினான்.


முற்றும்
நன்றி

அன்புடன் தமிழ் நிலா.

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா