Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நட்சத்திரங்கள்

4 comments


பனியில் குளிர்ந்த
சூரியப் பொறிகள்..

பருவப் பெண்ணின்
முகப்பருக்கள்..


நிலாவின் அந்தபுர
காவலாளிகள்...

கடலில் இருந்து தப்பிய
தங்க மீன்கள்...

ராத்திரியின்
வேர்வைத்துளிகள்...

வான ராஜாவின்
போராளிகள்...

உலகம்  போத்திக்கொள்ளும்
அழகான போர்வை...

செவ்வாய் பூமிக்கு அனுப்பிய
செய்மதிகள்...

யாருக்கு முதல் இரவு
பூக்கள் போடப்பட்டிருக்கின்றன...

தமிழ்நிலா

Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி தனபாலன் ஐயா அவர்களே..

    ReplyDelete
  3. vithyasamana rasanai ulla varigal

    '' யாருக்கு முதல் இரவு பூக்கல் போடபட்டு இருகின்றன"

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா