Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
ஏதாவது ஒரு படம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட ஆசை, ஈழ சினிமா என்பது மிகப்பெரியது, அதில் எங்களுக்கு புரிதல்களுக்கு இடங்கள் குறைவு, எத்தனையோ ஆளுமைகள் கடந்து வந்த பாதை, இங்கிருந்து சென்று இந்திய சினிமாவில் சாதித்தவர்களும் உண்டு, அப்படியான இந்த சினிமாவில் எங்கள் உள்ளீடும் இருக்க வேண்டும் என்பது அவா,
இது நாங்கள் எடுத்த ஒரு குறும்படம் பற்றிய தகவல். இந்த காலப்பகுதியில், நடந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பாதிப்பில் உருவானது, இது எமது முதல் படைப்பு, இதற்கு சில விருதுகளும் கிடைத்தது. 

அப்பாவினை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருக்கலாம், அப்பா ஆரம்பத்தில் நண்பனாயும், பின் எதிரியாகும், இறுதியில் ஹீரோ ஆகவும் மாறிப்போவார். அப்பா, அம்மா சொல்லி தான் தெரியவரும், அது போல தான் அப்பா பற்றிய கதைகளும். 

என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை


சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
சிலம்பின் பரல்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்..
தீயினை அணைக்க
இது போதாது தான்...
தீ படர்ந்தாகிட்டு..மேலுமாய்...


நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...



உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..

இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில்  நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...

தமிழ்நிலா

உன் ஒவ்வொரு கேள்வியும்
பலவிடைகளுடனேயே ஆரம்பிக்கிறது..
இருப்பினும் உனக்காய் ஒரு கேள்வி தயார்..

இந்த வாழ்கை எப்படி ஆரம்பித்தது என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எப்படி முடியப்போகின்றது என்றும் தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஆக எமக்கு கிடைத்த வாழ்க்கையை வாழ்வதற்கும் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.


அன்று நீ இட்ட புள்ளி .
நேற்று நீண்டு வளர்ந்திருந்தது..
பின்நாளில் வளைந்துகொண்டிருந்தது...
மீண்டும் அந்த ஒற்றைப்புள்ளி
பிறிதொருநாளில் வளரலாம்.


போலிகள் கொடுத்து
காலிகள் நிரப்பப்ப..
சாலை எங்கிலும்
சோலையாய் மொய்த்தனர் 

மறைந்து திரிந்தவர்
உரிமை என்றனர்..
மறைந்தவர் கொண்டு 
உரிமை பேசினர்..?
மறந்து திரிந்தவர் 
உரிமை கேட்டனர்..

கொள்கை பேசியோர்
கொள்கை இழந்தனர்...?
கொள்ளை அடிப்பதற்காய்
வெள்ளை பூசினர்

வேட்டிகள் வந்தனர் 
சேலைகள் தந்தனர்...
நம் வாக்குகள் வேண்டி
பொய் வாக்குகள் தந்தனர்...

வீதிகள் வந்தன, மின்னும் வந்தது..
கற்பனை எல்லாம் சொற்களாய் வந்தது..
சொன்னவர் பின்னே வந்தவை எல்லாம் 
அன்றே போயின.. அன்றோடு போயின 

போனவர் வருவார், இல்லை 
அவர் பேரனார் வருவர்...
வருடங்கள் ஐந்து பறந்துடும் இங்கு..
மறக்காதே தம்பி அவைகள் விசஜந்து...

தமிழ்நிலா

ஒரு நிலா நாளில்
என் தேசம் களவாடப்பட்டது..
ஒன்றாய், ஒவ்வொன்றாய்,
எல்லாமுமாய்..


புரிதல்..
கண்ணீரில் தொடக்கி
புன்னகையிலும்..
புன்னகையில் தொடக்கி
கண்ணீரிலும்..
முடியலாம்...
Next PostNewer Posts Previous PostOlder Posts Home