முதியோர் தினம்
முதியவர்களை கௌரவப்படுத்தவும் அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாகவும்,
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1 ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு 45/106 தீர்மானத்திற்கமையவே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதன் முதலாக 1991 ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மேலைத்தேய நாடுகள் இந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள்.
சிறுவர் தினம்
அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14, 1954 இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டாலும், உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.
இன்றைய உலகு நவீன உலகில் பல்வேறு வழிகளிலும் துஸ்பிரயோகத்திற்க்கு உட்படுத்திவருகின்றனர். இதனால் சிறுவர்கள் பலதரப்பட்டபிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.
அவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், கனவுகள், சிந்தனைகள், சந்தோசங்கள் போன்றன மழுங்கடிக்கப் படுவதனால் இவர்கள் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தின் மீதுநம்பிக்கை இல்லாத தன்மை, விரக்தியுடையும் தன்மை என்பன அவர்களது எதிர்கால வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கின்றன.
எனவே இரு பகுதியினரையும் காப்பாற்ற வேண்டியது எல்லோருடைய கடமைகளும் ஆகும் ...
எனவே இரு பகுதியினரையும் காப்பாற்ற வேண்டியது எல்லோருடைய கடமைகளும் ஆகும் ...
அன்புடன் sanjay தமிழ் நிலா
Very Nice SAnjy
ReplyDeleteஇப்போது எமது கலாச்சாரம் போய்க்கொண்டிருக்கும் திசை எதிர்திசையனது.
ReplyDeleteதாய் தந்தை பேணதவனை அவனது பிள்ளைகள் பேணும் என்பது எவ்வாறு சாத்தியமானது. sanjay
ReplyDeleteநிச்சயம் பேனமாட்டார்கள் தான்..
ReplyDeleteமிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு... உண்மையில் பெற்றோரை பிள்ளைகள் தான் பார்க்கவேண்டும்
ReplyDelete