என்ன சும்மா இருந்தவன் இதை பற்றி அலட்டிக்கிறான் என்று யோசிக்கிறீங்க போல அதிகமா இப்ப நேரம் கிடைக்குது. நிறைய வாசிக்க, அறிய முடிகிறது, அதையும் பயனுள்ளதாக பதிவு இடுவது பற்றி யோசிச்சன்.
அந்தவகையில் ஒரு நாளேட்டில் நம்ம நாட்டின் புள்ளிவிபரம் இது தொடர்பாக பிரசுரிக்கப்பட்டிருந்தது, ஐயோ பார்த்தே ஆடிப்போட்டேனுங்க. உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 4.2 கோடி கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 2.2 கோடி மட்டுமே பாதுகாப்பான கருக்கலைப்பு ஆகும். மற்றவை பதுகாப்பற்ற கருக்கலைப்புகள் ஆகும். உலக அளவில் ஆண்டுக்கு சுமார் 70,000 கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் இறக்கின்றனர். நம்பவே முடியலையா..!!

பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடவோ, அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்துவதற்காகவோ கருக்கலைப்பு செய்யப்படுகிறது. வேலையில் ஏற்படும் குழப்பங்கள், படிப்பில் ஏற்படக் கூடிய இடைஞ்சல்கள், நிரந்தரமற்ற பொருளாதார நிலை, உறவுகளில் உறுதியற்ற தன்மை போன்றனவே பொதுவாக இவ்வகை தூண்டப்படும் கருக்கலைப்புக்கு காரணமாகின்றன. ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோது கர்ப்பம் தரித்திருந்தாலும், அல்லது தவறான பாலியல் நடவடிக்கை காரணமாகவும் இவ்வாறான கருக்கலைப்பு செய்யப்படுகிறது.
திருமணம் முடித்த 92% பெண்களிடையேயும் 8% திருமணம் செய்யாத பெண்களிடையும் இக்கருக்கலைப்பு சம்பவம்கள் இடம் பெறுவதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 27 வீதமான பெண்கள் கருக்கலைப்புக்கு உட்படுகின்றனர் இவற்றை தவிர்க்கும் முகமாக பல்வேறு குடும்பதிட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தொடர்பான அறிவூட்டும் நிகழ்வுகளும் நடாத்தப்படுகின்றன..
கருக்கலைப்பு என்றாலே ஏதோ தகாத உறவினால் உருவான குழந்தையைக் கலைக்கிறார்கள் எனும் எண்ணம் தான் பெருமாலானோருக்கு இருக்கின்றது. அது பிழை அல்ல, காரணம் எமக்கு பழக்கப்பட்டது அது தானே. உண்மையில் கருக்கலைப்புக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அவற்றுள் சில,
மருத்துவக் காரணங்கள். அதாவது கருவிலிருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏதேனும் இருக்கிறதா என்பதை மூன்றாவது மாதத்தில் எடுக்கும் ஸ்கேன் மூலம் அறிவார்கள்.அவரு இருப்பின் இங்கு ஊனத்துடன் துன்ப படகூடது என்ற நோக்கத்துக்காக. சிலருக்கு பிரசவம் நடந்தால் உயிருக்கே ஆபத்து எனும் மருத்துவ நிலை இருக்கும். டாக்டர் சொல்லிவிடுவார் அம்மா அல்ல பிள்ளையை தான் காப்பாற்ற முடியும் என்று. அம்மா இருந்தால் என்னும் பிள்ளைகள் பெற்று கொள்ளலாம் தானே என்ற நோக்கத்துக்காக அந்த சந்தர்பத்தில் கருகலைப்பு நடைபெறும்.
பல நாடுகளில் மதவாதிகள் இதனை எதிர்கிறார்கள். கரு கலைப்பு என்பது உயிர் கொலை என்கிறார்கள். உண்மையிலே இதனால் பல ஆபிரிக்க நாடுகளில் மரணங்கள் எல்லை மீறுகின்றன.
பல நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை ஆழமாய் அலசி ஆராய்ந்து கருக்கலைப்புக்கான சட்டங்களை வகுத்திருக்கின்றன. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பு சட்டவிரோதம். ஆனால் பாலியல் வன்முறையினாலோ, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.
2005ம் ஆண்டு பத்து ஐரோப்பிய நாடுகளில் விரிவான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. “பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கலாமா” என்பது தான் கேள்வி. அதிகபட்ச மாக கிரீச் ரிப்பப்ளிக் பிரதேசத்தில் 81 சதவீதமும், குறைந்த பட்சமாக போலந்து நாட்டில் 47 சதவீதம் மக்களும் வாக்களித்தனர்.
அமெரிக்காவில் வாழும் கனடா மக்களிடையே டிசம்பர் 2001ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 86 சதவீதம் பேர் தகுந்த காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யும் முடிவெடுக்கும் உரிமையை பெண்களிடம் விட்டு விடவேண்டும் என கருத்து சொன்னார்கள்.
வட அமெரிக்கா மட்டுமன்றி, தென் அமெரிக்காவில் அர்ஜெண்டீனாவில் 2003ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் 77 சதவீதம் பேர் கருக்கலைப்பை எதிர்க்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அதிக சிக்கல் இல்லை. 1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாய் பதினோரு மில்லியன் கருக்கலைப்புகள் நடக்கின்றனவாம் ! 4 மில்லியன் கருக்கலைப்புகள் மறைமுகமாகச் செய்யப்படுகிறதாம். என்.சி.எம்.ஏ (National Consensus for Medical Abortion in India) சொல்கிறது.
இதேவேளை இலங்கையில் கருக்கலைப்பு சட்ட அங்கீகாரம் இல்லாத போதிலும் அதை கட்டாயமானதாக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது எமது நாட்டில் எவ்வாறான பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. குறித்த சமூகத்தில் கௌரவமாக ஒரு பெண் வாழ்வதற்காக அவள் தான் சுயமாக முடிவு எடுக்கும் அதிகாரம் உண்டு. அவ்வாறு அவள் கருகலைப்புக்கு முடிவெடுத்து அதை நடைமுறைப் படுத்தலாம்.
இவ்வாறு கரு கலைப்பு சட்ட ரீதியாக்கப்படால் அதனை தவறான வழியில் பயன்படுத்தும் சமுதாயமும் நம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றன... தங்கள் தவறான உறவினால் உருவாகும் குழந்தைகளை அழிப்பதற்காக இதை பயன்படுத்தக்கூடும். மனதில் எந்த பயமின்றி தப்பு பண்ண முடியும், காரணம் கருக்கலைப்பு சட்டரீதியக்கப்பட்டுள்ளது எனவே இது தொடர்பாக வழக்கு தொடரப்பட மாட்டாது என்பது தான்.
இரண்டு பக்கமும் சரியான விவாதம் உள்ள ஒரு பிரச்சனையே இந்த கருக்கலைப்பு. பின்னூட்டம் பகுதியில் நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்..
இரண்டு பக்கமும் சரியான விவாதம் உள்ள ஒரு பிரச்சனையே இந்த கருக்கலைப்பு. பின்னூட்டம் பகுதியில் நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்..
இன்று கொலை செய்யப்படுவது கரு அல்ல! அது நாளைய ஞானி, விஞ்ஞானி, தலைவன்/தலைவி, கவிஞன்/கவிதாயினி, சிந்தனையாளன், வைத்தியன், பொறியியலாளன், வங்கியாளன். ஒரு ஆசான் என்பதை நினைவில் கொள்க.!
அன்புடன் sanjay தமிழ் நிலா
சிறந்த ஆக்கம்.
ReplyDelete“கருக்கலைப்பு, சவக்காடாகி வரும் கருவறைகள்“ என்ற தலைப்பில் எனது தளத்தில் நானும் ஒரு இடுகையிட்டுள்ளேன். அவசியப்பட்டால் பார்த்துக்கொள்ளலாம். பயனுள்ளதாக இருக்கும். http://aliaalifali.blogspot.com/2009/10/blog-post_26.html
அண்ணா நன்றி உங்கள் கருத்துரைக்கு... அவசியம் பார்வையிடுகிறேன்.
ReplyDelete@Online Works For Allநன்றி உங்கள் தகவலுக்கு
ReplyDelete