Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பூ அல்ல பூவை இவள்..

2 comments

டிமைப்  பெண்ணிலிருந்து
புதுமைப்  பெண்ணாய் மாறியவள் 
பெண்...
சிறகுகள் செய்து
பறக்க கற்றுக்கொண்டவள் 
பெண்..

கேள்விக்குறியை (?)
ஆச்சரியக்குறியாக்கியவள் (!)
பெண்... 

எங்கு அவள் ...???

வானில் பறக்கிறாள் 
வானவில்லை பிடிக்கிறாள்..
செய்மதி செய்கிறாள்
செய்திகள் சொல்கிறாள்...
கப்பல் ஓட்டுகிறாள்
கடலுக்குள் நீந்துகிறாள்..
வைத்தியம் செய்கிறாள்
வள்ளுவன் ஆகிறாள்..
கட்டியம் சொல்கிறாள்
கட்டிடம் கட்டினாள்..
வாதம் செய்கிறாள்...
நீதி காக்கிறாள்...
போர் செய்கிறாள்
பார் ஆழ்கிறாள்...

மாணவர் ஏறிவரும் ஏணி அவள்..
கண்ணி எடுக்கும் கன்னி இவள்..

அரசாங்கம்..அரசியலிலும் 
அவள் பிரவேசம்..
எங்கு இல்லை
இங்கு பெண் வேஷம்..

எங்கும் அவள் தான்...

ஆனால்...

கசங்கிவிடமாட்டள்
பூ அல்ல பூவை இவள்.
காணமல்போகமாட்டாள்
காற்று அல்ல காரிகை இவள்.

எழுத்துப்பிழைகளால்  உருவானவள்
இப்போது கவிதை ஆகிவிட்டாள்...
ஆணுக்கு அடிமையாய் கிடந்தவள் 
ஆணை  முந்தி விட்டாள்..

ஆண்கள் இன்னமும் குழந்தைபெற 
 தயாராக வில்லை...

தமிழ்நிலா

உதயன் 2012

காற்றுவெளி 2013 April 




(10/09/2012) உதயன் பத்திரிக்கையில் வந்த எனது கவிதை. அனுப்பிய கவிதையில் பல வரிகள் நீக்கப்பட்டிருப்பதால் முழுமை அடையவில்லை என்று நினைக்கிறேன் 



Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. அருமை அருமை
    பெண் எதையும் எதிர்பார்த்து
    ஏங்கி நிற்பவள் இல்லை
    செய்பவள் செயலாய் நிற்பவள்
    அவள் அண்டி நிற்பவள் இல்லை
    அப்படிக் காட்டிக் கொள்பவள்
    அதனி புரிந்து கொள்ளத ஆண்கள்தான்
    அதிகம் அவதிப்படுகிறார்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றிகள் அண்ணா

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா